தீய பழக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொடர்ந்து கட்டைவிரலை உறிஞ்சுவது குழந்தைகளின் கெட்ட பழக்கமாக கருதப்படுகிறது, ஏனெனில் இது பற்களின் வளர்ச்சியைப் பாதிக்கலாம். [1]

தீய பழக்கம் (Bad habit) அல்லது கெட்ட பழக்கம் என்பது எதிர்மறையாகக் கருதப்படும் நடத்தை முறையாகும்.இதன் பொதுவான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு: தள்ளிப்போடுதல், அதிக செலவு செய்தல் மற்றும் நகம் கடித்தல். [2]

வளர்ச்சி[தொகு]

ஒரு நபர் சராசரியாக 66 நாட்களில் ஒரு புதிய பழக்கத்தைப் பெற முடியும் என்று பழக்கவழக்க உருவாக்கம் பற்றிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. [3] [4] [5] வளர்ச்சியின் காலம் குறித்து பல வேறுபாடுகள் உள்ளன. ஒரு கெட்ட பழக்கத்தைக் கைவிட அல்லது புகைபிடித்தல் போன்ற ஆரோக்கியமற்ற நடத்தை முறையை மாற்ற அதிக நேரம் எடுக்கலாம். [6]

தடுப்பு முறைகள்[தொகு]

ஒரு கெட்ட பழக்கமானது நிலையான பழக்கவழக்கமாக மாறுவதற்கு முன்பே சரிசெய்யபட வேண்டும். இதன்மூலம், குழந்தை பருவத்தில் கெட்ட பழக்கங்கள் வளர்வதைத் தடுக்கலாம். [7]

குணப்படுத்துதல்[தொகு]

கெட்ட பழக்கங்கள் நிலையான பழக்கவழக்கமாக மாறினால் அவற்றை அகற்ற பல வழிகள் உள்ளன. தீய பழக்கம் எனத் தெரிந்த பிறகு 21 முதல் 28 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அந்த பழக்கத்திற்கு அடிபணியாமல் இருக்க முடிந்தவரை கடினமாக முயற்சி செய்ய வேண்டும். பின்னர் மீண்டும் ஒரு வாரம் முயற்சி செய்யவும். பழக்கம் தொடர்ந்தால், இந்தச் செயல்முறையை மீண்டும் செய்யவும், இந்த முறை அதிகம் வெற்றி பெற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. [8]

மேலும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. M. S. Muthu, M. Sivakumar (2009). Oral Habits. Elsevier. பக். 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131210581. 
  2. Suzanne LeVert, Gary R. McClain (2001). The Complete Idiot's Guide to Breaking Bad Habits. Alpha Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0028639863. https://books.google.com/books?id=QYynTz-w-LQC. 
  3. Dean, Jeremy (2013). Making habits Breaking habits. London: Oneworld. பக். 6–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781851689897. https://archive.org/details/makinghabitsbrea0000dean_y8q0. 
  4. "Making health habitual: The psychology of 'habit-formation' and general practice" (PDF). British Journal of General Practice. December 2012. பார்க்கப்பட்ட நாள் 2018-12-10.
  5. Lally Phillippa (2009). "How are habits formed: Modelling habit formation in the real world". European Journal of Social Psychology 40 (6): 998–1009. doi:10.1002/ejsp.674. 
  6. Nash, Joyce (2011). Lose Weight, Live Healthy: A Complete Guide to Designing Your Own Weight Loss Program. Boulder, CO: Bulls Publishing Company. பக். 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781936693146. 
  7. Bill Borcherdt (1996). Making Families Work and What to Do When They Don't. Haworth Press. பக். 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0789000733. https://archive.org/details/makingfamilieswo0000borc. 
  8. Herbert Fensterheim, Jean Baer (1975). Don't Say Yes When You Want to Say No. Dell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0440154138. https://books.google.com/books?id=Aog4MHedR-kC. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீய_பழக்கம்&oldid=3794346" இலிருந்து மீள்விக்கப்பட்டது