தீபா பாட்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபா பாட்டியா
பிறப்புஇந்தியா
பணிதிரைப்பட தொகுப்பாளர், இயக்குநர்
வாழ்க்கைத்
துணை
அமோல் குப்தே
பிள்ளைகள்பார்த்தோ குப்தே

தீபா பாட்டியா (Deepa Bhatia) என்பவர் மும்பையில் செயல்படும் பாலிவுட் திரைப்பட படத் தொகுப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். தாரே ஜமீன் பர், மை நேம் இஸ் கான் ராக் ஆன், கை போ சே, ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் மற்றும் ரயீஸ் போன்ற வணிகரீதியாக வெற்றிப் படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றியதற்காக இவர் அறியப்படுகிறார். [1] இவர் அண்மையில் கேதார்நாத், டிரைவ் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான, சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ் போன்ற படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். [2]

படத் தொகுப்பு பணி என்பது திரைப்படத்தில் எதையாவது சிறப்பாகச் செய்வது என்று தீபா நம்புகிறார். [3] இவரது சொந்த வார்த்தைகளில் சொல்வதானால், "ஒரு திரைப்படம் மூன்று முறை எழுதப்படுகிறது. முதல் முறை படத்தை தயாரிப்பதற்கு முந்தைய எழுத்துப் பணி, இரண்டாவது முறை, அதை இயக்கும் போது, மூன்றாவது முறை, அதை படத் தொகுப்பு செய்யும் போது என்கிறார். படத் தொகுப்பாளர்கள் தங்களுக்கான அங்கிகாரத்தைப் பெறாதது துரதிர்ஷ்டவசமானது. அது ஏமாற்றமளிக்கிறது. வெட்டுவது மட்டுமே படத் தொகுப்பு என்று மக்கள் நினைக்கும் போது எனக்கு வெறுப்பாக உள்ளது" என்கிறார்.

2010 இல், யு. டி. வி. வேர்ல்ட் மூவீஸ் அலைவரிசையின் சேகரிப்பில் இருந்து இவரது விருப்பப்படி நான்கு திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதற்காக. ஒரு மாதத்தின் ஆளுமையாக இவரை அலைவரிசை தேர்ந்தெடுத்தது. அப்போது இவர் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் மச்சுகா, கசின் கசின், டிவின் சிஸ்டர்ஸ் மற்றும் 8 உமன்ஸ் ஆகியவை ஆகும். [4]

தொழில்[தொகு]

தீபா முழுநேரப் பணியாக தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் ஈடுபடுவதற்கு முன் இயக்குனர்களுக்கு உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் படத் தொகுப்பாளராக 20 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவம் கொண்டவர். இவர் கோவிந்த் நிகலானி (தேவ், ஹசார் சௌராசி கி மா, தேஹாம் ) மற்றும் ஜானு பருவா ( மைனே காந்தி கோ நஹி மாரா, ஹர் பால் ) போன்ற இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளார். [5] கை போ சே மற்றும் ராக் ஆன் போன்ற படங்களில் இவரது படத் தொகுப்புப் பணி மிகவும் குறிப்பிடத்தக்க பணிகளில் ஒன்றாகும். இவர் ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். [6]

பாலிவுட்டில் திரைப்பட படத் தொகுப்பாளராகப் பணியாற்றியது தவிர, மகாராட்டிரத்தில் விவசாயிகள் தற்கொலைகள் பற்றிய நீரோஸ் கெஸ்ட்ஸ்: தி ஏஜ் ஆஃப் இக்வாலிட்டி என்ற தலைப்பில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஆவணப்படத்தையும் இயக்கி தயாரித்துள்ளார். [7] இந்த ஆவணப்படம் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் (MIFF) இரண்டு விருதுகளை வென்றது. [8] இந்த சவாலான ஆவணப்படத்தை இயக்க தீபாவுக்கு ஐந்து ஆண்டுகளும், படத் தொகுப்பு செய்ய ஒரு ஆண்டும் ஆனது. [2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

தீபா திரைக்கதை எழுத்தாளர் அமோல் குப்தேவை மணந்தார். இந்த இணையருக்கு பார்த்தோ குப்தே என்ற மகன் உள்ளார். [9] இவர் சோபியா பாலிடெக்னிக்கின் முன்னாள் மாணவி ஆவார். [10] [11]

திரைப்படவியல்[தொகு]

படத்தொகுப்பாளர்[தொகு]

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1998 ஹசார் சௌராசி கி மா
1999 தக்சக்
2004 தேவ்
2005 மைனே காந்தி கோ நஹின் மாரா
தி ஹேங்மேன்
2007 தாரே ஜமீன் பர்
2008 ராக் ஆன்!!
2010 மை நேம் ஈஸ் கான்
2011 ஸ்டான்லி கா டப்பா தயாரிப்பாளர்
2012 ஃபெராரி கி சவாரி
ஸ்டூடட் ஆப் த இயர்
2013 காய் போ சே!
பாம்பே டாக்கீஸ்
2014 ஹவா ஹவாய்
பிளாஸ்போ (ஆவணப்படம்) [12] ஆலோசனை ஆசிரியர்
உங்லி
2016 சுபான் [13]
ஃபிதூர்
2017 ரயீஸ்
சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ்
டாடி
2018 கேதார்நாத்
2019 டிரைவ்
2021 ஸ்கேட்டர் கேள்

இயக்குநர்[தொகு]

  • நீரோஸ் கெஸ்ட்ஸ்: தி ஏஜ் ஆப் இன்யூகியூவாலிடி (ஆவணப்படம்) [8]

விருதுகள்[தொகு]

ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள்

  • பெற்றது : சிறந்த படத்தொகுப்பாளர் – ராக் ஆன்!!
  • பெற்றது : எஸ்.ஐ.ஜி.என்.எஸ். 2011 இல் சிறந்த ஆவணப்படத்திற்கான ஜான் ஆபிரகாம் தேசிய விருது – நீரோஸ் கெஸ்ட்ஸ்
  • பெற்றது : சிறந்த படத்தொகுப்பு - காய் போ சே!

மேற்கோள்கள்[தொகு]

  1. "Deepa Bhatia – JNAF". பார்க்கப்பட்ட நாள் 2019-11-23.
  2. 2.0 2.1 "Deepa Bhatia on her cutting (edge) career (and how it came together)". பார்க்கப்பட்ட நாள் 2019-11-23.
  3. Inside an Editor's Studio | Deepa Bhatia | Cheat Sheet (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2019-11-23
  4. . 
  5. "Magic Lantern Movies LLP". பார்க்கப்பட்ட நாள் 2019-11-23.
  6. "5 Women Editors in Indian Cinema We Should Know About". பார்க்கப்பட்ட நாள் 2019-11-23.
  7. oberon.nl, Oberon Amsterdam, Nero's Guests | IDFA, பார்க்கப்பட்ட நாள் 2019-11-23
  8. 8.0 8.1 "EDITOR'S CUT". epaper.timesofindia.com. பார்க்கப்பட்ட நாள் 2017-09-26.
  9. "Roast of Patriarchy | Latest News & Updates at Daily News & Analysis" (in en-US). Daily News and Analysis. 2016-11-19. http://www.dnaindia.com/lifestyle/report-roast-of-patriarchy-2274771. 
  10. "Film editor Deepa Bhatia to turn director" (in en-US). The Indian Express. 2014-08-22. http://indianexpress.com/article/entertainment/screen/film-editor-deepa-bhatia-to-turn-director/. 
  11. "'Sachin: A Billion Dreams': You don't have to be a cricket fan to love the biopic". The News Minute. 2017-05-26. http://www.thenewsminute.com/article/sachin-billion-dreams-you-dont-have-be-cricket-fan-love-biopic-62635. 
  12. Ramnath, Nandini. "Documentary 'Placebo' offers a dose of student life, and it isn't easy to swallow" (in en-US). Scroll.in. https://scroll.in/article/761379/documentary-placebo-offers-a-dose-of-student-life-and-it-isnt-easy-to-swallow. 
  13. "'Zubaan': Busan Review" (in en). The Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/review/zubaan-busan-review-828846. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபா_பாட்டியா&oldid=3886025" இலிருந்து மீள்விக்கப்பட்டது