தீபக் பூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபக் பூரி
Deepak Puri
கல்விஇயந்திரப் பொறியியல் - இம்பீரியல் கல்லூரி இலண்டன்
பணிநிர்வாகத் தலைவர், மோசர் பேயர்
வாழ்க்கைத்
துணை
நீடா பூரி
பிள்ளைகள்இராதுல் பூரி
வலைத்தளம்
Profile at Moser Baer website

தீபக் பூரி (Deepak Puri) இந்தியாவின் புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட மோசர் பேயர் என்ற நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். நொடிப்பு காரணமாக நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டது.[1][2][3][4][5]

தீபக் பூரி ஆரம்பத்தில் ஈஎசுஎசுஓ என்ற எண்ணெய் நிறுவனத்தில் இளைய செயல் அலுவலராகப் பணியாற்றினார் - 1962 ஆம் ஆண்டு கொல்கத்தாவில், பின்னர் சாலிமார் வண்ணங்கள் நிறுவனத்தில் பணியிலிருந்தார். 1964 ஆம் ஆண்டில், பூரி தனது முதல் நிறுவனமான உலோகத் தொழிற்சாலையை கல்கத்தாவில் தொடங்கினார், அலுமினிய கம்பிகள் மற்றும் தளபாடங்கள் வர்த்தகம் செய்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உற்பத்தியிலும் இறங்கினார். கல்கத்தாவில் தொழிலாளர் பிரச்சனைகள் காரணமாக, 1983 ஆம் ஆண்டில் புது தில்லிக்கு குடிபெயர முடிவு செய்தார். அங்கு இவர் சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட மோசர் பேயர் உடன் இணைந்து மோசர் பேயர், இந்தியாவைத் தொடங்கினார்.[6]

கல்வி[தொகு]

தீபக் பூரி இலண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் படித்தார். மேலும் செயின்ட் இசுடீபன் கல்லூரி மற்றும் புது தில்லியில் உள்ள மாடர்ன் பள்ளியில் தனது கல்வியை முடித்தார். அமிட்டி பல்கலைக்கழகம் இவரது முன்மாதிரியான முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், இவருக்கு தத்துவப் பாடத்தில் முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

விருதுகள்[தொகு]

  • ஜனவரி 2010 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இந்திய தொழில்துறையின் வளர்ச்சிக்கான இவரது பங்களிப்பிற்காக பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[7]
  • 2002 ஆம் ஆண்டில் மின்னணு மனிதன் விருது
  • தகவல் தொழில்நுட்ப மனிதன் விருது
  • சிறந்த தொழில்முனைவர் விருது
  • 2009 ஆம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Moser Baer (India) – Corporate Insolvency Resolution Process (CIRP)-Liquidation – Corporate Insolvency Resolution Process (CIRP) – Currency Research Reports". www.moneycontrol.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-09.
  2. "ITBHUGlobal.org: The Chronicle: Interview: Mr. Deepak Puri, CEO, Moser Baer India Ltd". Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2 August 2009.
  3. "Pangea Capital to invest $30M In Deepak Puri's Cobol Technologies". Reuters. 30 April 2009 இம் மூலத்தில் இருந்து 24 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181024073843/https://in.reuters.com/article/idINIndia-39352320090430. பார்த்த நாள்: 23 October 2018. 
  4. "Moser Baer to invest $250 m". The Hindu. 6 March 2007. https://www.thehindu.com/todays-paper/tp-business/Moser-Baer-to-invest-250-m/article14729786.ece. பார்த்த நாள்: 23 October 2018. 
  5. "OutlookMoney > Article". Archived from the original on 13 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2 August 2009.
  6. "Bull Run for Baer". Business today. http://businesstoday.intoday.in/story/indias-new-business-families-deepak-puri/1/14392.html. பார்த்த நாள்: 14 November 2014. 
  7. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபக்_பூரி&oldid=3933256" இலிருந்து மீள்விக்கப்பட்டது