தீனா கவுர் பாஸ்ரிச்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீனா கவுர் பாஸ்ரிச்சா
கல்விபுனித மேரிஸ் கான்வென்ட், அஜ்மீர்
படித்த கல்வி நிறுவனங்கள்
  • எம்.பி.எம் இன்ஜி. மண்டல கல்லூரி, ஜோத்பூர்
  • பாரதிய வித்யா பவன், புது தில்லி
பணிஎழுத்தாளர், திரைப்பட படைப்பாளி
செயற்பாட்டுக்
காலம்
2003 - தற்போது
வாழ்க்கைத்
துணை
தனித்து

தீனா கவுர் பாஸ்ரிச்சா (Teenaa Kaur Pasricha) என்பவர் ஒரு சுயாதீன திரைப்படப் படைப்பாளி மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவரது மிகவும் பாராட்டப்பட்ட ஆவணப்படம் "1984, வென் தி சன் ரைஸ்" ஆகும். [1] இது 1984 படுகொலையில் இருந்து தப்பிய பெண்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

இவர் சிறந்த புலனாய்வுத் திரைப்படம்- சிறந்த தயாரிப்பாளர் மற்றும் சிறந்த இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார். [2] [3] டி.சி ஆசிய பசிபிக் திரைப்பட விழாவில் வளர்ந்து வரும் சிறந்த திரைப்படப் படைப்பாளிக்கான விருதையும் இவர் பெற்றார்.

இவர் சமூக மாற்றத்திற்கான திரைப்படங்களின் சர்வதேசத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இது 2020 சனவரியில் அமெரிக்க கலாச்சார விவகாரங்கள் துறையால் வழங்கப்பட்ட பெலோஷிப் ஆகும்.

இவர் நி.யா ஆசியா சொசைட்டியிலிருந்து திரைக்கதை எழுதுவதில் பெல்லோஷிப் பெற்றுள்ளார். [4] அவர் சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஆவணப்படங்களை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இவரது படங்கள் நேஷனல் ஜியோகிராஃபிக், ஃபாக்ஸ் ஹிஸ்டரியில் ஒளிபரப்பப்பட்டன, பி.எஸ்.பி.டி, 'ஏ.என்.டி' ஃபண்ட்- பி.யு.எஸ்.ஏ.என் இண்டல் திரைப்பட விழா , டி.ஒ.சி-ஒர்க், ஐஏடபில்யூஆர்டி திரைப்பட விழா, [5] மற்றும் பிட்சிட்டா கலெக்டிவ் பெல்லோஷிப் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டன.

தொழில்[தொகு]

தீனா கவுர் 1984, வென் தி சன் டுட் ரைஸ் படத்திற்காக புசன் சர்வதேச திரைப்பட விழாவின் மதிப்புமிக்க நிதியுதவி 2015ல் இருந்து மதிப்புமிக்க "ஏ.என்.டி" நிதியுதவியைப் [4] பெற்றார். இவர் சோத்பூரில் உள்ள எம்.பி.எம் பொறியியல் கல்லூரியில் உற்பத்தி மற்றும் தொழில்துறை பொறியியல் பட்டதாரி ஆவார். 

இவரது மற்ற படங்கள் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பற்றியவை ஆகும். தி டீர், டிரீ அண்ட் மீ என்ற இவரது படைப்பு ஆவணப்படம், மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் (MIFF) 2016 இல் சிறந்த ஆவணப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது [6] இது கொச்சி சிக்என்எஸ் திரைப்பட விழா, 2015 இல் திரையிடப்பட்டது. மேலும் கொல்கத்தா இன்டர்நேஷனல் அசோசியேஷன் ஆஃப் வுமன் இன் ரேடியோ அண்ட் டெலிவிஷன் (IAWRT) திரைப்பட விழா, 2016 இல் திரையிடப்பட்டது. [7]

நேஷனல் ஜியோகிராஃபிக் மற்றும் ஃபாக்ஸ் ஹிஸ்டரியில் சிம்பொனி வித் எர்த் ஆவணப் படம் ஒளிபரப்பப்பட்டது. [8] தி வூட்ஸ் ஆர் காலிங் ஆவணப் படம் பொது சேவை ஒளிபரப்பு அறக்கட்டளைக்காக (PSBT) உருவாக்கப்பட்டது. [9] இது தூர்தர்ஷன், 2018 டாக்கா சர்வதேச திரைப்பட விழா, [10] 2018 எர்த் திரைப்பட விழா போன்றவற்றில் ஒளிபரப்பப்பட்டது. [11] இத்திரைப்படம் யெரெவனின் சன்சைல்ட் சர்வதேச சுற்றுச்சூழல் விழா, [12] கொல்கத்தா மக்கள் திரைப்பட விழா (KPFF) போன்றவற்றில் திரையிடப்பட்டது. [13] [14] [15] [16]

அவரது திரைப்படமான "MAUJJ" என்.எப்.டி.சி ஸ்கிரிப்ட் லேபில் தேர்ந்தெடுக்கப்பட்டு காட்டப்பட்டது. ஐ.ஏ.டபிள்யூ.ஆர்.டி திரைப்பட விழாவினால் வழங்கப்பட்ட "வாட் இஃப் ஐ டெல் யூ" என்ற ஆவணப்படத்திற்காக ஜெய் சண்டிரம் பெல்லோஷிப் விருதைப் பெற்றார். [5]

இவரது ஆவணப் படங்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் திரையிடப்பட்டுள்ளன. [17] [18] [19] [20] [21]

திரைப்படவியல்[தொகு]

விருதுகளும் பரிந்துரைகளும்[தொகு]

  • 2018 - 1984 வென் தி சன் ரைஸ் அவணப்படம் 65வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த புலனாய்வுத் திரைப்படத்திற்கான விருதை பெற்றது. [28]
  • 2018 - 1984 வென் தி சன் ரைஸ் அவணப்படம் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் தேசிய போட்டியில் பரிந்துரைக்கப்பட்டது. [29]
  • 2016 - தி டீர், டிரீ, அண்ட் மீ அவணப்படம் மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் [30] சிறந்த ஆவணப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "1984, When The Sun Didn't Rise: Women Who Survived The Anti-Sikh Massacre". Feminism In India (in அமெரிக்க ஆங்கிலம்). 28 September 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  2. 2.0 2.1 "Director of film on anti-Sikh massacre wins national award and calls it a victory for justice seekers". The Georgia Straight (in ஆங்கிலம்). 2018-05-06. பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  3. "Teenaa Kaur Pasricha on the making of her National Award-winning film 1984 - When the Sun Didn't Rise". firstpost.com. 25 April 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-11-24.
  4. 4.0 4.1 "2015 Asian Network of Documentary (AND) Fund". Asian Cinema Fund. பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  5. 5.0 5.1 "IAWRT India – International Association of Women in Radio & Television India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-18.
  6. "INTERNATIONAL COMPETITION" (PDF). miff.in. பார்க்கப்பட்ட நாள் 2018-11-28.
  7. "diary India International centre" (PDF). iicdelhi.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2018-11-28.
  8. "FACE TO FACE with Teenaa Kaur Pasricha". oneindiaonepeople.com. October 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-11-28.
  9. 9.0 9.1 "PUBLIC SERVICE BROADCASTING TRUST" (PDF). psbt.org. பார்க்கப்பட்ட நாள் 2018-11-28.
  10. 10.0 10.1 "16th Dhaka International Film Festival, 2018". dhakafilmfestival.org. பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  11. 11.0 11.1 "Quotes from The Earth Flim Festival 2018" (PDF). toxicslink.org. பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  12. 12.0 12.1 "The Woods are Calling". SunChild International Environmental Festival (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  13. 13.0 13.1 "Kolkata People's Film Festival" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  14. "Meet Teenaa Kaur Pasricha The Women Behind '1984, When The Sun Didn't Rise'". shethepeople.tv. பார்க்கப்பட்ட நாள் 2018-11-28.
  15. "Teenaa Kaur Pasricha: Idea is to reach the universe and tell a story of survival". cinestaan.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-28.
  16. "India International Centre". iicdelhi.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2018-11-28.
  17. "Film Screening of 1984, When the Sun Didn't Rise". Emory University.
  18. "Critically acclaimed documentary '1984: When the Sun Didn't Rise' to be shown across the UK". Asian Image (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  19. "A searing look into the 1984 anti-Sikh riots". The Hindu.
  20. "Documentary Screening & Panel Discussion w/ Director Teenaa Kaur Pasricha". allevents.in. பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  21. "Hola The Mighty Colors screened at Sikh Arts Film Festival" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  22. "1984, When The Sun Didn't Rise review: Stirring documentary gives voice to the widows of anti-Sikh riots". cinestaan.com. பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  23. "Featuring the sorrow of the bereaved". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  24. "The Woods are Calling – PSBT" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
  25. "Whose Land Is It Anyway?". Godrej India Culture Lab (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-20.
  26. The deer, tree and me - IMDb, பார்க்கப்பட்ட நாள் 2020-08-16
  27. "Treading softly in the wild" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/mumbai/treading-softly-in-the-wild/article8266503.ece. 
  28. "65th NATIONAL FILM AWARDS FOR 2017" (PDF). 164.100.117.97. பார்க்கப்பட்ட நாள் 2018-08-29.
  29. "LIST OF FILMS SELECTED FOR NATIONAL COMPETITION SECTION IN MIFF-2018". miff.in. பார்க்கப்பட்ட நாள் 2018-11-25.
  30. "Question that drove film on 1984 anti-Sikh riots: 'If we don't talk about our history, who will?'". scroll.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீனா_கவுர்_பாஸ்ரிச்சா&oldid=3892062" இலிருந்து மீள்விக்கப்பட்டது