தி பிளாக் சுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த பிளாக் சுவான்: தி இம்பேக்ட் ஆப் தி ஐலி இம்பிராபபிள் (The Black Swan: The Impact of the Highly Improbable) என்பது நாசிம் நிக்கோலசு தேலபு என்ற அறிஞர் எழுதிய நூல் ஆகும். இதனை ஏப்ரல் 17, 2007 அன்று ரேண்டம் ஹவுஸ் வெளியிட்டது. சில வகை அரிதான மற்றும் கணிக்க முடியாத நிகழ்வுகளின் தீவிர தாக்கம் குறித்தும் அவை நடந்து முடிந்த பிறகு இந்த நிகழ்வுகளுக்கு எளிமையான விளக்கங்களை அளிக்கும் மனிதர்களின் முனைவு குறித்தும் இந்நூல் கவனம் செலுத்துகிறது. நூல் வெளி வந்த காலம் தொட்டு இந்தக் கோட்பாடு காரணக் கோட்பாடு என்று அறியப்படுகிறது.

இந்நூல் அறிவு, அழகியல் மற்றும் வாழ்க்கை முறைகளைப் பற்றி பேசுகிறது. இவற்றை விளக்க புனைவுக் கூறுகளையும் பயன்படுத்துகிறது. மேலும், கோட்பாடுகளை விளக்க தேலபு தன் வாழ்க்கையில் இருந்தும் அடிக்கடி நிகழ்வுகளைப் பகிர்கிறார்.

நூலின் முதல் பதிப்பு 2007 இல் வெளிவந்து வணிக ரீதியில் வெற்றி பெற்றது. இது நியூ யார்க் டைம்ஸ் முன்னணி விற்பனைப் பட்டியலில் 36 வாரங்கள் இருந்தது[1]. இரண்டாவது விரிவுபடுத்தப்பட்ட பதிப்பு 2010 இல் வெளிவந்தது. இந்நூல் இன்செர்டோ (Incerto)[2] என்ற பெயரில் நிச்சயமற்ற நிலையைப் பற்றி அவர் எழுதிய நான்கு தொகுதி மெய்யியல் கட்டுரைகளின் ஒரு பகுதியாகும். இத்தலைப்பில் பின்வரும் நூல்கள் உள்ளன:ஆண்டிபிராகிள் (2012), த பிளாக் சுவான் (2007-2010), ஃபூல்டு பை ரேண்டம்னஸ் (2001) மற்றும் தெ பெட் ஆஃப் புரோகிரஸ்டசு (2010-2016).

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_பிளாக்_சுவான்&oldid=3053901" இருந்து மீள்விக்கப்பட்டது