உள்ளடக்கத்துக்குச் செல்

தி டிராஜிகல் கிசுடரி ஆப் ரோமியசு அண்ட் ஜூலியட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோமஸ் மற்றும் ஜூலியட்டின் சோக வரலாற்றின் முன்பகுதி.

தி டிராஜிகல் கிசுடரி ஆப் ரோமியசு அண்ட் ஜூலியட் (The Tragical History of Romeus and Juliet) என்பது ஆர்தர் ப்ரூக்கின் கதைக் கவிதை ஆகும். இக்கவிதையினை 1562ஆம் ஆண்டில் ரிச்சர்ட் டோட்டல் என்பவர் முதன்முதலில் வெளியிடப்பட்டார். இது வில்லியம் சேக்சுபியரின் ரோமியோ ஜூலியட்டின் முக்கிய ஆதாரமாக இருந்தது. பரூக் இதை மேட்டியோ பண்டெல்லோவின் இத்தாலிய நாவலிலின் மொழிபெயர்ப்பாகக் கூறப்படுகிறது. மற்றொரு கோட்பாட்டின்படி, இது முக்கியமாக பண்டெல்லோவின் நாவலின் பிரெஞ்சு தழுவல் என்பதாகும். இது ரியோமியோ டைடென்சசு மற்றும் ஜூலியட் பைபிலோடெட் என்ற பெயர் கொண்ட பியர் போயிஸ்டுவா எனும் மனிதனை உள்ளடக்கியது.

சேக்சுபியரின் ரோமியோ ஜூலியட்டின் கதைக்களம் நான்கு நாட்களில் நடைபெறுகிறது. ஆனால் புரூக்கின் கதை பல மாதங்கள் நடைபெறுகிறது.

ஆர்தர் புரூக் பற்றி அதிகம் அறியப்படவில்லை. தாமசு சாக்வில்லே மற்றும் தாமசு நார்டன் ஆகியோரின் அனுசரணையின் கீழ் 18 திசம்பர் 1561-ல் இவர் இன்னர் டெம்பிள் உறுப்பினராக அனுமதிக்கப்பட்டார்.[1] இவர் 1563-ல் பிரெஞ்சு மதப் போர்களில் புராட்டஸ்டன்ட் படைகளுக்கு உதவும் போது கப்பல் விபத்தில் மூழ்கி இறந்தார்.

கவிதையின் முடிவு சேக்சுபியரின் நாடகத்திலிருந்து கணிசமாக வேறுபடுகிறது-கவிதையில், செவிலியர் விரட்டியடிக்கப்படுகிறார் மற்றும் வஞ்சகத்தில் ஈடுபட்டதற்காக மருந்தாளுநர் தூக்கிலிடப்படுகிறார். அதே சமயம் ப்ரையர் லாரன்ஸ் வெரோனாவை விட்டு தனது நாட்களை ஒரு துறவி இல்லத்தில் முடிக்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nelson, Alan (2010). Records of Early English Drama: Inns of Court Volume 2. D.S. Brewer. p. 735.

வெளி இணைப்புகள்

[தொகு]