உள்ளடக்கத்துக்குச் செல்

தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி
அமெரிக்க வெளியீடு ஒட்டி
இயக்கம்செர்ஜியோ லியோனி
தயாரிப்புஆல்பெர்டோ கிரிமால்டி
திரைக்கதைஎஜ் மற்றும் ஸ்கார்பெல்லி
செர்ஜியோ லியோனி
லூசியானோ வின்சென்சோனி
இசைஎன்னியோ மோரிக்கோனி
நடிப்புகிளின்ட் ஈஸ்ட்வுட்
லீ வான் கிளீஃப்
ஈலாய் வாலாக்
ஒளிப்பதிவுடோனினோ டெல்லி கோல்லி
படத்தொகுப்புயூஜீனியோ அலபிசோ
நினோ பராக்ளி
விநியோகம்யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ்
வெளியீடுதிசம்பர் 15, 1966 (1966-12-15)
திசம்பர் 23, 1967 (United States)
ஓட்டம்177 நிமிடங்கள்
நாடுஇத்தாலி
மொழிஇத்தாலியம், ஆங்கிலம்
ஆக்கச்செலவு$ 1,200,000[1][2]
மொத்த வருவாய்$25,100,000[3] (உள்ளூர்)
$158,759,909 (பணவீக்கத்துக்கேற்ப)

தி குட், தி பேட் அண்ட் தி அக்ளி (The Good, the Bad and the Ugly, இத்தாலியம்: Il buono, il brutto, il cattivo) 1966 இல் வெளியான ஒரு ஸ்பாகெட்டி மேற்கத்தியப் பாணி இத்தாலிய மொழித் திரைப்படம். செர்ஜியோ லியோனி இயக்கிய இப்படத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட், லீ வான் கிளீஃப், ஈலாய் வாலாக் ஆகியோர் நடித்திருந்தனர். இது டாலர்கள் முப்படத்தொகுதியில் வெளியான இறுதித் திரைப்படமாகும். ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உலகெங்கும் திரையிடப்பட்ட இது திரைப்படத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இத்திரைப்படம் அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது கூட்டமைப்பு மாநிலங்களின் தங்கப் புதையலைத் தேடிச் செல்லும் மூன்று துப்பாக்கி வீரர்களின் கதையைச் சொல்கிறது. நல்லவன் (தி குட்) - “பெயரில்லா மனிதன்” (கிளின்ட் ஈஸ்ட்வுட்), கெட்டவன் (தி பேட்) -ஏஞ்சல் ஐஸ் (லீ வான் கிளீஃப்), அழகற்றவன் (தி அக்ளி) - டூக்கோ (ஈலாய் வாலாக்) ஆகிய மூன்று துப்பாக்கி வீரரகளும் தங்கப்புதையலை அடையப் போட்டியிடுகிறார்கள். அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின்னணியில் கதை நடக்கிறது.

1966 இல் இத்தாலியிலும், 1967 இல் அமெரிக்காவிலும் வெளியான இத்திரைப்படம் வர்த்தக ரீதியாக பெருவெற்றி பெற்றது. திரைப்பட விமர்சகர்கள் அனைவரும் இதனை வரவேற்கவில்லை. இதன் வன்முறைக் காட்சிகள் குறைகூறப்பட்டன. தொடக்க கால விமர்சனங்கள் முழுமையான வரவேற்பைக் கொண்டிருக்கவில்லையெனினும் காலப்போக்கில் இதனை மக்கள் ஒரு செவ்வியல் படைப்பாக கருதத் தொடங்கினர். ஐ.எம்.டி.பி இணையத்தளத்தின் வாசகர் வாக்குகளால் முடிவு செய்யப்படும் ”250 தலைசிறந்த திரைப்படங்கள்” பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. Hughes, p.12
  2. Munn, p. 59
  3. Boxofficemojo.com

மேற்கோள்கள்[தொகு]