தி அயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி அயில்
இயக்கம்கிம் கி-டக் (திரைப்பட இயக்குநர்)
தயாரிப்புலீ இண்
கதைகிம் கி-டக் (திரைப்பட இயக்குநர்)
நடிப்புசு ஜங்
கிம் யு-சியோக்
கலையகம்மையுங் பிலிம்ஸ்
விநியோகம்சிஜெ எண்டர்டெயின்மென்ட்
வெளியீடுஏப்ரல் 22, 2000 (2000-04-22)
ஓட்டம்90 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
ஆக்கச்செலவுஐஅ$1 million[1]
மொத்த வருவாய்ஐஅ$20,666[2]

தி அயில் 2000 ல் வெளிவந்த தென் கொரிய திரைப்படமாகும். இதனை கிம் கி-டக் எழுதி இயக்கியிருந்தார். இது கிம் கி-டக்கின் ஐந்தாவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சு ஜங், கிம் யு-சியோக் ஆகியோர் நடித்திருந்தனர்.

கதைச் சுருக்கம்[தொகு]

ஏரியில் மிதக்கும் சிறிய வீடுகளில் தங்க வருகின்றவர்களைப் படகில் அழைத்து செல்வதையும், அவர்களுக்கு உணவு தருவதையும் தொழிலாகக் கொண்ட கதாநாயகி, எப்போதுமே தனிமையில் இருக்கிறாள். இரு கொலைகளைச் செய்து காவல்துறைக்கு பயந்து அங்கு தங்க வருகின்ற ஒருவனிடம் அவளுக்கு காதல் உண்டாகிறது. அக்காதலுக்காக இரு கொலைகளை செய்யும் அவள். இறுதியில் காதலனோடு அந்த சிறிய வீடொன்றுடன் யாருமில்லாத வெகுதூரத்திற்கு சென்றுவிடுகிறாள்.

விருதுகள்[தொகு]

ஃபாண்டாஸ்போர்டோ மற்றும் வெனிஸ் திரைப்பட விழா ஆகியவற்றிலும் விருதுகளைப் பெற்றது இப்படம்.

சர்ச்சை[தொகு]

இத்திரைப்படத்தில் மீன்கொக்கிகைளைக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயலும் இரு காட்சிகள் இடம்பெற்றன. அத்துடன் மீன், பறவை போன்ற விலங்களை கொல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதனால் இத்திரைப்படத்தினை வன்முறை நிறைந்த படமாக விமர்சனம் செய்கின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Korean Film Commission (2000). Korean Cinema 2000. பக். 64. 
  2. "koreanfilm". Boxofficemojo. Retrieved March 04, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_அயில்&oldid=2908503" இலிருந்து மீள்விக்கப்பட்டது