உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்யா தேசுமுக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திவ்யா தேசுமுக்
Divya Deshmukh

நாடுஇந்தியா
பிறப்புதிசம்பர் 9, 2005 (2005-12-09) (அகவை 18)[1]
மகாராட்டிரம்[2]
பட்டம்பெண் கிராண்டுமாசுட்டர் (2021)
பிடே தரவுகோள்2301 (பிப்ரவரி 2022)
உச்சத் தரவுகோள்2431 (ஏப்ரல் 2019)[3]

திவ்யா தேசுமுக் (Divya Deshmukh) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச்[2] சேர்ந்த ஒரு சதுரங்க வீராங்கனையாவார். 2005 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் பெண் கிராண்டுமாசுட்டர்களில் திவ்யா தேசுமுக்கும் ஒருவர்.[4] 2020 ஆம் ஆண்டு இணையவழியாக நடைபெற்ற சதுரங்க ஒலிம்பியாடு அணியில் இவரும் ஒருவராக இருந்தார்.[5] 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாத நிலவரத்தின்படி இந்திய தேசிய வெற்றியாளராகத் திகழும் திவ்யா[6] இந்தியப் பெண்கள் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்தார்.[7] 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெறவுள்ள 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் விளையாடவும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Divya Deshmukh". Twitter. பார்க்கப்பட்ட நாள் 6 May 2022.
  2. 2.0 2.1 Sampat, Amit (2 March 2022). "Divya topples top seed Vaishali, set to become senior national chess champion". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 6 May 2022.
  3. "Divya Deshmukh FIDE profile". பார்க்கப்பட்ட நாள் 8 திசம்பர் 2020.
  4. Ahmed, Shahid (19 October 2021). "Divya Deshmukh becomes the 22nd Woman Grandmaster of India". Chessbase India. பார்க்கப்பட்ட நாள் 27 February 2022. Divya Deshmukh scored her final WGM-norm in her first tournament in over 17 months at First Saturday GM October 2021.
  5. "India – FIDE Online Olympiad 2020". FIDE Online Olympiad 2020 / July 24 - August 30. பார்க்கப்பட்ட நாள் 27 February 2022.
  6. "Arjun Erigaisi, Divya Deshmukh Clinch Indian National Championships".
  7. "FIDE Ratings". பார்க்கப்பட்ட நாள் 27 February 2022.
  8. "AICF announces biggest-ever Indian squad for 44th Chess Olympiad". www.4psnews.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்யா_தேசுமுக்&oldid=3779842" இலிருந்து மீள்விக்கப்பட்டது