திவிவேதுல விசாலாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திவிவேதுலா விசாலாட்சி (Dwivedula Visalakshi 1929 - 7 நவம்பர் 2014 [1] ) என்பவர் பரவலாக அறியப்பட்ட தெலுங்கு எழுத்தாளர் ஆவார்.ஆந்திரப் பிரதேசத்தின் கலாச்சாரத் தலைநகரான விஜயநகரத்தைச் சேர்ந்த இவர், சிறுகதைகள் மற்றும் புதின எழுத்தாளராகத் தன்னைத் தனித்துவப்படுத்திக் கொண்டார்.வைகுண்டபாளி, வாரதி முதல் எந்த தூரம் ஏ பயணம் வரை இவரது தனித்துவமான பாணியினால் அறியப்படுகிறார்.வாராதி புதினத்தினை அடிப்படையாக வைத்து வெளியான திரைப்படம் வெற்றி பெற்றது.1998 இல் ஐதராபாத்தில் உள்ள பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்குப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

பல புத்தகங்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

1999 இல் சிறீ இராசலட்சுமி அறக்கட்டளையின் இலக்கிய விருதைப் பெற்றார்.

பௌர கிராந்தாலயம் துவாரகாநகர், விசாகப்பட்டினம், டாக்டர். டி. வி. சுப்பா ராவ் முன்னாள் மேயர், ஸ்ரீ பமிடிபதி ராமகோபாலம் ஆகியோர் முன்னிலையில் தனது நூல்களை உரிமையினை பொது நூலகத்திற்கு வழங்கினார்.

இலக்கியப் படைப்புகள்[தொகு]

  • வைகுண்டபாலி (1963)
  • ஈ பயணம் சதிகி
  • எக்கவலசின ரைலு
  • வாராதி
  • என்ட தூரம் ஈ பயணம்
  • ரியாட்டி வெலுகு
  • கிரஹணம் விதிச்சிண்டி
  • மாரினா விழுவாலு
  • ஜாருது மெட்லு

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திவிவேதுல_விசாலாட்சி&oldid=3823730" இலிருந்து மீள்விக்கப்பட்டது