திலோனியா
Appearance
திலோனியா என்பது வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மேர் மாவட்டத்தில் உள்ள ஓர் கிராமம் ஆகும். இங்கு பேர்பூட் கல்லூரி பங்கர் ராய் அவர்களால் தொடங்கப்பட்டது. இக்கிராமம் பிற பின்தங்கிய கிராமங்களுக்கு பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஒரு முன்னுதாரணமாய் உள்ளது.
கல்வி
[தொகு]இக்கிராமத்தில் பகலில் இயங்கும் கல்விச் சாலைகள் மூன்று உள்ளன.
- இராஜஸ்தான் அரசின் அரசுப் பள்ளி
- பேர்பூட் கல்லூரி
- பால் சன்ஸ்கார் (Bal Sanskar ) பள்ளி