திறவுகோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாவி (Chave என்ற போர்த்துகீசிய சொல்லி இருந்து வந்தது) பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும். பூட்டினைத் திறக்கவும், பூட்டவும் பயன்படும் ஒரு உபகரணம் அகும். ஆங்கிலத்தில் key என வழங்கப்படும். இது பொதுவாக ஒரு பக்கம் நீண்டும் மற்றொரு பக்கம் தட்டையாக அகன்றும் காணப்படும். பட்டையான அகன்ற பக்கம் ஒரு துளையுடன் காணப்படும். சாவியை சாவிக்கொத்தில் இணைக்க இந்தத் துளை உதவுகிறது. சில வகை சாவிகள் ஒருபக்கம் மட்டும் பல் அமைப்பை கொண்டும் ஒரு பக்கம் சமமாகவும் இருக்கும். சில இரண்டு பக்கமும் ஒரே மாதிரியான பல்லமைப்பைக் கொண்டிருக்கும் இது இருபக்கச் சாவி எனப்படும். சில வகை சாவிகள் பல்லமைப்பைக் கொண்டுள்ள பக்கத்தில் உருளை வடிவில் உட்புறம் ஒரு துளையுடன் காணப்படும். தொட்டி பூட்டு எனப்படும் பெரிய வகைப் பூட்டுகளின் சாவியும் மிக நீண்டு பெரியதாகவும் அதிக எடையுள்ளதாகவும் இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திறவுகோல்&oldid=3065155" இலிருந்து மீள்விக்கப்பட்டது