திறன்மிகு நுண்ணுயிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திறன்மிகு நுண்ணுயிரி (Effective microorganism) என்பது தொழில் சார்ந்த விவசாய மாற்றங்கள் அல்லது சுற்றுச்சூழல் பயன்பாடுகளில் வளிவேண்டா உயிரினங்களைக் கலப்பது ஆகும். திநு தொழினுட்பம் (திறன்மிகு நுண்ணுயிரி தொழினுட்பம்) சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுப்பதற்காகவும், பிற விவசாயம் சார்ந்த நன்மைக்காகவும் பயன்படுத்த எண்ணம் கொண்டதாகும். ஆயினும், இது நீண்டகால பயன்பாட்டில் எவ்வாறான பயன்தரும் என்பதை இன்னும் அறிவியல் சார்ந்த முறையில் நிரூபிக்கப்படவில்லை. [1]

கூடிய ஆக்கக்கூறுகள்[தொகு]

சப்பானில் ஒகினாவில் உள்ள ரியுகியுஸ் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த டாக்டா். டெருவோ ஹிகா என்பவர் EM ( EFFECTIVE MICRO ORGANISMS - திறன்மிகு நுண்ணுயிர்கள் ) தொழிற்நுட்பத்தை 1982 ல் உருவாக்கினார. இது ஒன்றுக்கொன்று உதவி புரியும் நுண்ணுயிர்கள் மூலம் பயன்படுத்தப்படும் உயிரி தொழிநுட்பமாகும். இது ஒரு வணிகமுத்திரையிட்ட தயாரிப்பாக இ.எம்-1 நுண்ணுயிரி உருகற்மிகைப்பி (EM-1 Microbial Inoculant) என முதலில் சந்தைப்படுத்தப்பட்டது. அவ்வாறான கரைசலில் மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான பின்வரும் நுண்ணூயிர்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

 • பால் அமில பற்றுயிரி
 • ஒளிச்சேர்க்கை பற்றுயிரி
 • நொதி
 • இன்னும்பிற: இயற்கையாக சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பயன்தரவல்ல நுண்ணுயிரிகளையில் கரைசலில் கலக்கலாம்.

ஈ எம் நுண்ணுயிர்களின் தொழிற்நுட்பமும் செய்முறையும்[தொகு]

மேப்பிள் ஈஎம் என்பது ஒரு மூலக்கரைசல். அதில் நுண்ணுயிர்கள் பெரும்பாலும் செயல்படாமல் உறங்கும் நிலையில் அப்படியே இருக்கும். மூலக்கரைசலில் அவை ஓராண்டுவரை உயிருடன் உறங்கிக் கொண்டு இருக்கும்.

ஈஎம் 1 மூலக்கரைசலையும் சம அளவு வெல்லமும் 20 பங்கு கொள்ளளவு சுத்தமான நீா் ( குளோரின் கலக்காதது) ஆகியவற்றைச் சோ்த்து அதை ஊக்குவிக்க வேண்டும். பின்னர் இக்கலவையை தரமான நெகிழிப் பாத்திரத்தில் காற்றுப்புகாமல் இறுக்கமான மூடியால் ஒரு வாரத்திற்கு மூடி வைத்து நொதிக்க வைக்க வேண்டும். பாத்திரத்தில் வாயுவின் அழுத்தம் ஏற்பட்டு உடையாமல் இருக்க, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பாத்திரத்தின் மூடியை திறந்து வாயுவை வெளியேற்றி விட வேண்டும். அதன்பிறகு பயன்படுத்துவதற்கு தயாராகிவிடும். இந்த செயலுாக்கம் செய்யப்பட்ட ஈஎம் கரைசலில் 1: 100 என்ற விகிதத்தில் நீரைச் சேர்த்து கழிவறை, தரை போன்றவற்றை தினசரி துடைத்துச் சுத்தம் செய்யலாம். இவ்வாறு செயலுாக்கம் செய்யப்பட்ட கரைசலை 6 வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.[2]

ஈஎம் . கரைசலின் பயன்கள்[தொகு]

 1. பள்ளி கழிவறை தரைகளை சுத்தம் செய்யப் பயன்படுகிறது.
 2. விவசாயம், தோட்டக்கலைத் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
 3. இயற்கைக் கழிவுகளின் துர்நாற்றத்தையும், அதனால் கவரப்படும் புாச்சிகளையும் கட்டுப்படுத்தப்படுகிறது.
 4. 2005 - சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்குப் பிறகு ஏற்பட்ட துர்நாற்றம் நோய் பரவல் ஆகியவற்றை தடுப்பதற்கு ஈஎம் பயன்படுத்தப்பட்டு நல்ல பலன் ஏற்பட்டது.
 5. எரு தயாரித்தல், நகராட்சிக் கழிவு மேலாண்மை, கழிவு நீர் - கழிவுநீா் சுத்திகரிப்பு, துப்புரவு மேலாண்மை, மாசுபட்ட மண், நீர் நிலைகள் மறுவாழ்வு பெறவும் ஈஎம் வெற்றிகரமாக பயன்னடுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. Foxon, K; Still, D (2012). Do pit additives work?. Water Research Commission, University of Kwazulu-Natal, Partners in Development (PiD), South Africa. http://www.susana.org/en/resources/library/details/2162. 
 2. UNICEF - நவம்பர்2011 வெளியீடு - பள்ளி சுகாதாரம் மற்றும் உடல்நலக்கல்வி ஆசிரியர் கையேடு