உள்ளடக்கத்துக்குச் செல்

திறந்தவெளி அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழைய நகரம்—டென்மார்க்கின் ஆரசு நகரில் உள்ள ஒரு திறந்தவெளி அருங்காட்சியகம்

திறந்தவெளி அருங்காட்சியகம் என்பது காட்சிப்பொருட்களைத் திறந்த வெளியில் காட்சிக்கு வைக்கும் ஒரு சிறப்பு வகை அருங்காட்சியகம் ஆகும். முதலாவது திறந்தவெளி அருங்காட்சியகம் இசுக்கண்டினேவியாவில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் நிறுவப்பட்டது. இது விரைவிலேயே ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும், வட அமெரிக்காவுக்கும் பரவியது.

வாழ்நிலை அருங்காட்சியகம் அல்லது வாழ்நிலை வரலாற்று அருங்காட்சியகம் எனப்படுவது திறந்தவெளி அருங்காட்சியகங்களின் ஒரு வகை. இந்த அருங்காட்சியகங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்த உடைகளை அணிந்திருப்பவர்கள் அக்கால வாழ்க்கை முறைகளைச் செயற்பாடுகள் மூலம் காட்டுவர். அவர்கள் தற்காலத்தை விட வேறுபட்ட இன்னொரு காலத்தில் வாழ்வது போலவே நடிப்பர். அவர்கள் அக்காலத்து, அன்றாட வீட்டு வேலைகள், கைப்பணிகள், தொழில் முதலியவற்றை அக்காலத்தில் நிகழ்ந்ததுபோலவே செய்து காட்டுவர். பழைய வாழ்க்கை முறைகளை இக்காலத்துப் பார்வையாளர்களுக்கு விளக்குவதே இதன் நோக்கம் ஆகும்.