உள்ளடக்கத்துக்குச் செல்

திரைக்கோயில் குடைவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரைக்கோயில் குடைவரை, தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திரைக்கோயில் என்னும் ஊரில் உள்ள ஒரு குடைவரை ஆகும். இது முற்றுப்பெறாத நிலையில் உள்ளது.

அமைப்பு

[தொகு]

இக்குடைவரையில் ஒரு வரிசையில் தூண்கள் காணப்படுகின்றன. இத்தூண்களில் இரண்டு முழுத்தூண்கள். பக்கச் சுவர்களுடன் ஒட்டியவாறு இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. தூண்களின் மேற் பகுதியும், கீழ்ப்பகுதியும் சதுர வெட்டுமுகம் கொண்டனவாகக் காணப்பட்டாலும், இடைப்பகுதி அரைகுறையாக உள்ளது. உட்புறப் பணிகளும் முழுமை பெறவில்லை. இது குடையப்பட்ட பாறையில் பழுது இருப்பது தெரிந்ததால் வேலை இடையில் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது.[1]

காலம்

[தொகு]

இது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது எனினும், துல்லியமாக இதன் காலத்தை அறிந்துகொள்வதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 92
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைக்கோயில்_குடைவரை&oldid=4044601" இலிருந்து மீள்விக்கப்பட்டது