திரெப்நோயியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திரெப்நோயியம் (Trepopnea) என்பது ஒரு வகையான மூச்சுத்திணறல் நோயாகும். ஒரு பக்கம் நன்கு சாய்ந்த நிலைக்கு நோயாளி திரும்பும்போது, மூச்சுவிடுதல் மிகவும் செளகரியமாக இருக்கும் நிலை உணரப்படும். ஆனால் மறு பக்கம் பக்கவாட்டு நிலைக்கு திரும்பும்போது இவர்களுக்கு அச்சௌகரியம் கிடைக்காமல் மூச்சுத்திணறல் உண்டாகும். [1] இத்தகைய நோய் நிலையை திரெப்நோயியம் என்ற பெயரால் அழைக்கிறார்கள். ஒரு நுரையீரல் நோய், ஒரு பெரிய மூச்சுக்குழாய் அல்லது நாள்பட்ட இதய செயலிழப்பு நோய் போன்றவற்றால் இந்நிலை விளைகிறது. பெரும்பாலான ஒரு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட திரெப்நோயிய நோயாளிகள் நோயுற்ற நுரையீரலின் எதிர் பக்கத்தில் படுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஏனெனில் ஈர்ப்புவிசை கீழ் நுரையீரலின் உள்விரவலை அதிகரிக்கிறது. நோயுற்ற நுரையீரலில் உள்விரவல் அதிகரித்தால் நுரையீரல் குலுக்கலும் மற்றும் இரத்தத்தில் ஆக்சிசன் குறைவும் அதிகரிக்கும், இதன் விளைவாக மூச்சுத் திணறல் பெரிதும் மோசமடைகிறது. ஆரோக்கியமான நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிக்க, நோயாளி ஆரோக்கியமான நுரையீரல் இருக்கும் பக்கவாட்டில் படுத்துக் கொள்வது சிறந்தது. இதனால் நுரையீரலுக்கு போதுமான உள்விரவல் கிடைக்கும். நாள்பட்ட இதய செயலிழப்பு நோயாளிகள் பெரும்பாலும் வலதுபுறமாகத் திரும்பி படுத்துக்கொள்ள விரும்புகிறார்கள், இவர்கள் தங்கள் நுரையீரலுக்கு ஒரு சிறந்த இரத்தப் பொழிவையும் பெற்று குறைவான மூச்சுத்திணறலையும் அனுபவிக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tsunezuka, Yoshio; Sato, Hideo; Tsukioka, Toshihide; Shimizu, Hiroshi (2000), "Trepopnea due to recurrent lung cancer", Respiration, 67 (1): 98–100, doi:10.1159/000029472, PMID 10705272
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரெப்நோயியம்&oldid=3093065" இருந்து மீள்விக்கப்பட்டது