திருவாரூர் கைலாச நாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவாரூர் கைலாச நாதர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக கைலாச நாதர் உள்ளார். இங்குள்ள இறைவி மாணிக்கவல்லி ஆவார். கைலாசம் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வணங்கினால் சிறப்பு என்று கருதுகின்றனர்.[1]

அமைப்பு[தொகு]

இக்கோயில் இரண்டு நிலை ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. தியாகராஜர் கோயிலை நோக்கிய நிலையில் காணப்படுகிறது.சிவனுக்கு வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும் காணப்படுகின்றனர். சண்டிகேசுவரர் சன்னதி இக்கோயிலில் உள்ளது.[1]

திருவிழாக்கள்[தொகு]

மாசி மகம், பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]