திருவம்பாடி சிவசுந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவம்பாடி சிவசுந்தர் (பூக்கோடன் சிவன்)
2012இல் திருவம்பாடி சிவசுந்தர்
இனம்இந்திய யானை
பால்ஆண் யாணை[1]
பிறப்புசுமார் 1964, கொடநாடு வனப்பகுதி.
இறப்புமார்ச் 11, 2018
திருச்சூர், கேரளா, இந்தியா
நாடுஇந்தியா
Employerதிருவம்பாடி சிறீ கிருஷ்ணன் கோவில்
Successorதிருவம்பாடி செரிய சந்திரசேகரன்
உயரம்3.06 m (10 அடி 0 அங்)

திருவம்பாடி சிவசுந்தர் (Thiruvambadi Sivasundar) (பிறப்பு; சுமார் 1964 - மார்ச் 11, 2018)[2] என்பது இந்தியாவின் கேரளாவில் திருச்சூரில் உள்ள திருவம்பாடி சிறீ கிருஷ்ணன் கோவிலில் வாழ்ந்த ஒரு இந்திய யானையாகும்.[3] இதன் அழகின் காரணமாக "அழகிந்தே தம்புரான்" என்றும் "பூரநாயகன்" என்றும் அழைக்கப்பட்டது.

தொழில்[தொகு]

இந்த யானைக்கு முதலில் பூக்கோடன் சிவன் என்று பெயரிடப்பட்டது. இது முன்பு மரத்தொழிற்சாலையில் பணிபுரிந்தது.[4] 2003ல், தொழிலதிபர் சுந்தர் மேனனால் ₹28 இலட்சத்துக்கு வாங்கப்பட்டது. மேனன் அதைத் திருவம்பாடி சிறீ கிருஷ்ணர் கோவிலில் தெய்வத்திற்குக் காணிக்கையாக வழங்கினார். [5] அன்று முதல் திருச்சூர் ஒவ்வொரு ஆண்டும் பூரம் திருவிழாவின் போது கோயில் சார்பில் கடவுள் சிலையை சுமந்து வந்தது.

இறப்பு[தொகு]

இது, மார்ச் 11, 2018 அன்று அதிகாலை 1:30 மணியளவில் இறந்தது. இது தனது வாழ்நாளின் கடைசி 67 நாட்களாக மலச்சிக்கலால், உடல் எடை குறைந்ததன் காரணமாக சிகிச்சை பெற்று வந்தது.[6]

இதன் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.[7] பின்னர் கேரளாவில் உள்ள கொடநாடுக்கு இதன் உடல் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. "Thiruvambadi Sivasundar dies". kaumudi.com. Archived from the original on 2018-03-19. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
  2. Muringatheri, Mini (17 March 2018). "Sivasundar, a legend vanishes". The Hindu. http://www.thehindu.com/news/national/kerala/sivasundar-a-legend-vanishes/article23281883.ece. 
  3. "Kerala's celebrated temple elephant Thiruvambadi Sivasundar passes away". 12 March 2018.
  4. "When Thiruvambadi Sivasundar walked into the forest in protest".
  5. "Sivasundar, a legend vanishes". http://www.thehindu.com/news/national/kerala/sivasundar-a-legend-vanishes/article23281883.ece. Muringatheri, Mini (17 March 2018).
  6. Muringatheri, Mini (18 March 2018). "Sivasundar, a legend vanishes". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/sivasundar-a-legend-vanishes/article23283876.ece. 
  7. Staff Reporter (11 March 2018). "Legendary elephant Thiruvambadi Sivasundar dies". The Hindu. http://www.thehindu.com/news/national/kerala/thiruvambadi-sivasundar-dies/article23041698.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவம்பாடி_சிவசுந்தர்&oldid=3558426" இலிருந்து மீள்விக்கப்பட்டது