உள்ளடக்கத்துக்குச் செல்

திருவண்ணாமலை சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவண்ணாமலை சண்டை
முதலாம் ஆங்கிலேய மைசூர் போர் பகுதி

போர் அரங்கின் வரைபடம்
நாள் 25 செப்டம்பர் 1767
இடம் தமிழ்நாடு
பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு வெற்றி
பிரிவினர்
மைசூர் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி
தளபதிகள், தலைவர்கள்
ஐதர் அலி & திப்பு சுல்தான் கர்ணல் ஜோசப் ஸ்மித்

திருவண்ணாமலை சண்டை (Battle of Tiruvannamalai) முதலாம் ஆங்கிலேய மைசூர் போரின் ஒரு பகுதியே திருவண்ணாமலைச் சண்டை, செங்கம் சண்டை மற்றும் ஆம்பூர் சண்டை ஆகும்.

திருவண்ணாமலை சண்டை 25 செப்டம்பர் 1767ல், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் கூட்டணி படைகளுக்கும், மைசூர் மன்னர் ஐதர் அலியின் படைகளுக்குமிடையே 25 செப்டம்பர் 1767 அன்று துவங்கியது. கம்பெனிப் படைகளுக்கு கர்ணல் ஜோசப் ஸ்மித் தலைமை தாங்கினார்.

போர்

[தொகு]

ஐதர் அலியின் படைகள் 3 செப்டம்பர் 1767 அன்று செங்கத்தை முற்றுகையிட்டது. 25 செப்டம்பர் 1767 அன்று பிரித்தானிய கம்பெனி படைகளுக்கும், ஐதர் அலியின் படைகளுக்கும் நடைபெற்ற இரண்டு ஆண்டு போரில் பிரித்தானியப் படைகளுக்கு உதவ வந்த ஆற்காடு நவாப் 4,000 வீரர்களையும், 64 பீரங்கிகளையும் இழந்தார். போரின் முடிவில் திப்பு சுல்தான் படைகள் திருவண்ணாமலையை கைப்பற்றியது.[1] ஏப்ரல் 1769ல் கிழக்கிந்தியக் கம்பெனியினர், ஐதர் அலியுடன் போர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.[2]

இதனையுக் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவண்ணாமலை_சண்டை&oldid=3737264" இலிருந்து மீள்விக்கப்பட்டது