திருப்பாலைப்பந்தல் உலா
Appearance
திருப்பாலைப்பந்தல் உலா [1] என்னும் நூல் அரங்கேற்றப்பட்டது குறித்துத் திருப்பாலை [2] ஊரில் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது. சைவ எல்லப்ப நாவலர் சோழநாட்டிலிருந்து தொண்டை நாட்டுக்குச் சென்றபோது திருப்பாலைப்பந்தல் ஊர் வழியாகச் சென்றார். இவ்வூர் மக்கள் தம் ஊரிலுள்ள பெருமான்மீது ஓர் உலாநூல் பாடித்தர வேண்டும் என வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எல்லப்ப நாவலர் இந்த நூலைப் பாடி அரங்கேற்றினார். அதனைப் பாராட்டி இவருக்கு மனையும், நிலமும் வழங்கிச் சிறப்பு செய்தது பற்றியும், அத்துடன் சாமி நிவேதனத்தில் ஒரு பகுதி நாள்தோறும் வழங்கப்பட்டது பற்றியும் கல்வெட்டில் [3] குறிக்கப்பட்டுள்ளது.
இக் கல்வெட்டில் இந்த ஆசிரியரின் பெயர் 'உண்ணாமுலை நயினார் புதல்வரான காலிங்கராய எல்லப்ப நயினார்' எனக் குறிக்கப்பபட்டுள்ளது.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ கடலூர் மாவட்டம் திருக்கோவலூருக்கு அருகில் உள்ள ஊர்
- ↑ கோயிலின் தென்புறச் சுவர்க் கல்வெட்டு