திருப்பணிப்பேட்டை சுந்தரேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பணிப்பேட்டை சுந்தரேசுவரர் கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் கமலாபுரம் அருகில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக சுந்தரேசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி அன்னபூரணி ஆவார். இறைவன் மேற்கு பார்த்த நிலையிலும், இறைவி கிழக்கு பார்த்த நிலையிலும் உள்ளனர்.[1]

அமைப்பு[தொகு]

இக்கோயிலின் திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் காணப்படுகின்றனர். அனைத்து கடவுள்களையும் வணங்கியபின் நந்தவனம் செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது.[1]

திருவிழாக்கள்[தொகு]

பிரதோஷம், அமாவாசை, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம், சிவராத்திரி, மாசி மகம் போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]