உள்ளடக்கத்துக்குச் செல்

திருநங்கையர் ஆவண மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநங்கையர் ஆவண மையம்
உருவாக்கம்2016
தலைமையகம்மதுரை,தமிழ்நாடு
ஆட்சி மொழி
தமிழ் & ஆங்கிலம்
நிறுவனர்
பிரியா பாபு
வலைத்தளம்transresourcecenter.com

திருநங்கையர் ஆவண மையம் (ஆங்கில மொழி: Transgender Resource Center) என்பது திருநங்கை, திருநம்பி உள்ளிட்ட மாற்றுப் பாலினத்தவர்கள் குறித்த ஆவணக் காப்பகமாகும்.[1] இம்மையம் 2016 இல் மதுரை விஸ்வநாதபுரத்தில் திருநங்கை பிரியா பாபுவால் தொடங்கப்பட்டு, தற்போது சின்னசொக்கிக்குளத்தில் இயங்கிவருகிறது.[2]

2019 இல் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற டிரான்ஸ் திரைப்படத் திருவிழா

அவ்வமைப்பானது தமிழ்நாடு பொது அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தன்னார்வல அமைப்பாகும். இதன் மூலம் மாற்றுப் பாலினத்தவர்களின் கல்வி, பயிற்சி, சட்ட அலோசனை, கலந்தாய்வு உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருகிறது. பல்வேறு மாணவர்கள், ஆய்வாளர்களுக்கான ஆவணப் பாதுகாப்பகமாகவும் செயல்பட்டுவருகிறது. திருநங்கையர் குறித்தான குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களுக்கான திரைப்படத் திருவிழாவினை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.[2]

இங்கு இருநூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள், 10,000 இற்கும் மேற்பட்ட செய்தித் தொகுப்புகள், அரசாணைகள், நீதிமன்ற ஆணைகள் என மாற்றுப் பாலினத்தவர் தொடர்பான பல தகவல்களைச் சேகரித்து, சேமிக்கப்படுகிறது.[3]


மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநங்கையர்_ஆவண_மையம்&oldid=3852844" இலிருந்து மீள்விக்கப்பட்டது