திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை
Appearance
திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை என்னும் நூல் கவிராச பிள்ளை என்பவரால் 16 ஆம் நூற்றாண்டு எழுதப்பட்டது. உ. வே. சாமிநாதையர் இதனைப் பதிப்பித்துள்ளார். காளத்தி நாதர் உலா நூல் பதிப்பிலும் இந்த நூலைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலைப் பாடி இந்த நூலின் ஆசிரியர் தனக்கு இளமையில் இருந்த நோயைப் போக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. நூலில் 100 பாடல்கள் இருந்திருக்கும் எனக் குறிப்பிடும் சாமிநாதையர் 49 பாடல்களை மட்டும் பதிப்பித்துள்ளார்.
- பாடல் எடுத்துக்காட்டு
(பொருள் நோக்கில் சொற்பிறப்பு செய்யப்பட்டுள்ளது)
- தருமம் தவம் சற்று அறியாத வேடுவன் தன் செருப்பும்
- அரு முந்து வேணிக்கு அணி மா மலர், அவன் வாய் அதகம்
- திரு மஞ்சனப் புனல் பல்லால் அவன் மென்று தின்ற தசை
- அருமந்த போனகம் அன்றோ, நம் காளத்தி அப்பருக்கே
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005
- திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை, நூல், மூலம் பரணிடப்பட்டது 2012-10-16 at the வந்தவழி இயந்திரம்