திரிப்பதாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிப்பதாகம்

திரிப்பதாகம் என்பது பரதநாட்டியத்தின் முக்கிய கூறான முத்திரைகளில், ஒற்றைக்கை முத்திரைகளில் ஒன்றாகும். இது மரம் என்ற கருத்தைக் குறிக்கிறது. இது பெருவிரலை மடித்து பக்கத்தில் பிடித்து, அணி விரலை (மோதிர விரல்) மடிக்கும் போது உருவாகிறது.[1]

திரிபதாக விநியோகங்கள்[தொகு]

திரிப்பதாகத்தில் மொத்தம் பத்து விநியோகங்கள் உள்ளன. சுலோகம்:-

மகுடே விருக்சபாவனே
வஜ்ரே தத்தரவாசவே
கேதகே குசுமே தீபே
வங்கிச்வாலாவிவிச்சுரும்பனே
கபோதே பத்திரலேகாயாம்
பாணார்த்தே பரிவர்த்தனே
யுஜ்ஜதே திரிபதாகோயாம்
கதிதோ பரதோத்தமைகி [2]
ஸ்லோகம் கருத்து
மகுடே மகுடம்
விருக்சே மரக்கிளை
வஜ்ரே இடி
தத்தரவாசவே இந்திரன்
கேதகே குசுமே பூக்கொத்து
தீபே தீபம்
வங்கிச்வாலாவிவிச்சுரும்பனே நெருப்பு
கபோதே புறா
பத்திரலேகாயாம் மார்பில் அல்லது முகத்தில் ஓவியம் வரைதல்.
பாணார்த்தே அம்பு
பரிவர்த்தனே சுற்றுதல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஒற்றைக்கை முத்திரைகள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.
  2. "திரிப்பதாக விநியோகங்கள் (ஆங்கிலத்தில்)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிப்பதாகம்&oldid=3558048" இலிருந்து மீள்விக்கப்பட்டது