திராசு பசுபதீசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திராசு பசுபதீசுவரர் கோயில் என்பது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள திராசு எனும் கிராமத்தில் அமைந்திருக்கும் சிவாலயமாகும்.[1] இச்சிவாலயத்தின் மூலவர் பசுபதீஸ்வரர், அம்பிகை பார்வதி. [2] இக்கோயிலுக்கு அருகே ஜோஸ்டா தேவி கோயில் மற்றும் அனுமார் கோயில் அமைந்துள்ளது. [1]

இச்சிவாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவரான பசுபதீஸ்வரர் கிழக்கு நோக்கி உள்ளார். அவரது சன்னதியின் இடதுபுறத்தில் அம்பிகை பார்வதி தெற்கு நோக்கி அமைந்துள்ளார். சுற்றுபிரகாரத்தில் கோயிலின் வடப்புறமாக சப்தமாதர்களும், விநாயகர், முருகன் சன்னதிகளும் உள்ளன. இச்சிவாலயத்தில் அம்பிகையின் சந்நிதி முன்பு ஆதிசங்கரின் சன்னதி அமைந்துள்ளது.

2009 ம் ஆண்டு இக்கோயிலுக்கு அருகிலுள்ள குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்ற போது முருகன் சிலை கிடைத்தது.[2] அது பின்னிரு கைகளில் உத்திராட்ச மாலையைக் கொண்டும், முன் வலக் கையில் சின் முத்திரை காட்டியவாறும், முன் இடக்கையை தொடையில் தாங்கியவாறும் இருந்தது. கரண்ட மகுடமும், மார்பின் இருபக்கம் முப்பெரும் விளிகள் கொண்டும் இருந்தது.[2] இதனை ஆய்வு செய்தவர்கள் இக்கோயில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்ததாகவும், முகலாயப் படையெடுப்பின் மூலம் சேதப்படுத்தப்பட்டு சிலைகள் புதையுண்டு போயிருக்க கூடும் என்று கூறுகிறார்கள். [2]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.dinamalar.com/news_detail.asp?id=1012762&Print=1
  2. 2.0 2.1 2.2 2.3 http://www.dinamani.com/edition_villupuram/cuddalore/article1205898.ece?service=print