தியோமாலி (மலை)
| தியோமாலி | |
|---|---|
| உயர்ந்த புள்ளி | |
| உயரம் | 1,672 m (5,486 அடி) |
| பட்டியல்கள் | இந்திய மலைகளின் பட்டியல் |
| ஆள்கூறு | 18°40′32″N 82°58′54″E / 18.67556°N 82.98167°E[1] |
| புவியியல் | |
| அமைவிடம் | கோராபுட் மாவட்டம், ஒடிசா, இந்தியா |
| மூலத் தொடர் | கிழக்குத் தொடர்ச்சி மலைகள் |
| அமைப்பியல் வரைபடம் | கூகுள் நிலப்பரப்பு வரைபடம்[2] |
| ஏறுதல் | |
| எளிய வழி | Hike / scramble |
தியோமாலி (Deomali) என்பது கிழக்குத் தொடர்ச்சி மலையின் சந்திரகிரி-பொட்டாங்கி அருகேயுள்ள ஒரு மலைச்சிகரமாகும். இது இந்திய மாநிலமான ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்திலுள்ள கோராபுட் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.
ஒடிசாவின் மிக உயரமான சிகரம்
[தொகு]தியோமாலி சிகரம், சுமார் 1,672 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது ஒடிசா மாநிலத்தின் மிக உயரமான சிகரமாகும். இது அடர் பச்சை காடுகளால் சூழப்பட்டுள்ளது, சிகரம் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் நிறைந்துள்ளது. இந்த மலைத்தொடரில் பாக்சைட், சுண்ணாம்பு மற்றும் இரத்தினக் கற்கள் போன்ற கனிம வளங்கள் நிறைந்துள்ளன. தியோமாலியில் நீரோடைகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் உள்ளன. மேலும் கந்தாக்கள், பராஜாக்கள், பூமியாக்கள், மாலிகள் மற்றும் போடியாக்கள் போன்ற பழங்குடியினர் வசிக்கின்றனர். இது சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி சாகச விளையாட்டு பிரியர்களுக்கும், மலையேறுபவர்களும் உகந்த இடமாகும். ஒடிசா சுற்றுலாத் துறை, சாலைகள், மலை உச்சியில் வசதிகள் மையம், அரங்கம், குடிநீர், கண்காணிப்பு கோபுரங்கள் ஆகியவற்றை இணைத்து சுற்றுலாப் பயணிகளிடையே இந்த சிகரத்தை ஒரு பிரபல சுற்றுலா தலமாக பிரபலப்படுத்த பல வளர்ச்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மலை உச்சிக்கு செல்லும் வழியில் பல நீர்வீழ்ச்சிகளும் காணப்படுகின்றன. [3]
