தியானோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியானோ (Theano)' (கிரேக்க மொழி: Θεανώ; கி.மு 6ஆம் நூற்றாண்டு) அல்லது குரோட்டானின் தியானோ,[1] எனும் பெயர் இரண்டு பித்தகோரிய மெய்யியலாளர்களைக் குறிக்கப் பயன்படுகிறது. இவர் பித்தகோரசின் மாணவியாகவும் மகளாகவும் மனைவியாகவும் பலவாறு குறிப்பிடப்படுகிறார். வேறு சிலர் இவரை பிராண்டினசின் மனைவியாகக் கூறுகின்றனர். இவரது பிறப்பிடமும் தந்தை அடையாளமும் கூட உறுதிபடுத்தப்படாமலே உள்ளன. இதனால் சிலர் இதே பெயரில் இருவர் இருந்ததாகவும் இருவரின் விவரங்களும் இணைக்கப்பட்டுவிட்டன என்றும் கூறுகின்றனர் (இவர்கள் முதல் தியானோ, இரண்டாம் தியானோ எனப்படுகின்றனர்).[2] சில துணுக்குகளும் கடிதங்களும், இவரதாகக் குறிப்பிடப்படுபவை, கிடைத்துள்ளன. என்றாலும் இவற்றின் ஆசிரியர் உறுதிசெய்யப் படவில்லை.

வாழ்க்கை[தொகு]

தியானோவின் வாழ்க்கையைப் பற்றிய தகவல் ஏதும் தெரியவில்லை.இவர் பற்றிய பண்டைய தகவல்கள் குழப்பமானவை. ஒரு மரபின்படி இவர் கிரேட்டில் பிறந்தவர். இவரது தந்தை பிதோனாக்சு,[3][4] ஆனால் மற்றவர்கள் இவர் குரோட்டானில் பிறந்த்தாகவும் இவரது தந்தை பிராண்டினசு என்றும் கூறுகின்றனர்.[4][5][6] பலர் இவர் பித்தகோரசின் மனைவி என்பர்,[3][4][5][6] என்றாலும் மற்றொரு மரபு இவரை பிராண்டினசின் மனைவி என்கிறது.[4][5][7] இலம்பிலிக்கசு என்பவர் குழப்பத்தைத் தீர்க்க, தைனோ தான் பிராண்டினசின் மனைவி என்கிறார்.[8]

பித்தகோரசுக்கும் தியானோவுக்கும் தாமோ, மையியா, அரிகுனோத் என மூன்று மகள்களும் தெலௌகெசு என்றொரு மகனும் இருந்ததாகக் கூறப்படுகிறது.[3][4][5][6]

எழுத்துகள்[தொகு]

தியானோவின் நூல்களாகக் கூறப்படுவன: பித்தகோரிய Apophthegms, பெண்பால் அறிவுரை, நன்னெறி பற்றி, இறைத்தோய்வு (பக்தி) பற்றி, பித்தகோரசு பற்றி, மெய்யியல் விளக்க உரைகள், கடிதங்கள்.[9] இவை ஏதும் இப்போது கிடைக்கவில்லை. ஆசிரியர் உறுதிபடாத சில துணுக்குகளும் கடிதங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன. இவை தியானோ இயற்றியவை என நிறுவ முயற்சிகள் நடைபெறுகின்றன. (சிலர் இவற்றை முதல் தியானோ இயற்றியது எனவும் வேறு சிலர் பிந்தைய இரண்டாம் தியானோ இயற்றியது எனவும் கூறுகின்றனர்.),[10] இவை எல்லாமே பிற்கால எழுத்தாளர்களது கற்பனைப் புனைவுகளாகவும் இருக்கலாம்.[9][11] இது பித்தகோரிய மெய்யியலை ஒரு பெண்ணின் வாழ்க்கைக்குச் சார்த்திகூற முயல்வதாகவே படுகிறது.[9] இறைத்தோய்வு குறித்து கிடைக்கும் துணுக்குகள் எண்களுக்கும் பொருள்களுக்கும் உள்ள பித்தகோரிய ஒப்புமையைப் பற்றியதாக உள்ளது; கிடைத்துள்ள பல கடிதங்களோ (வீட்டு) இல்லற வாழ்க்கையைப் பற்றிய: ஒரு பெண் எப்படி குழந்தையை வளர்ப்பது? அவள் வேலைக்காரரிடம் எப்படி நடந்து கொள்வது? அவள் கணவனிடம் எப்படி நன்னெறியுடன் இருப்பது? இன்னபிற... பற்றியன.[9]

மேரி ரிட்டர் பியர்டின் கூற்றுப்படி,கி.மு449இல் தூரியம் சார்ந்த கிப்போடமசு (அல்லதுமிலேத்தசு சார்ந்த கிப்போடமசு, தூரியம் நகரை உருவக்கியதாக தியானோ கூறியுள்ளாராம். அரிசுட்டாட்டிலின் கூற்றுப்படியும் இது சரிதான்.[12] நன்னெறி பற்றி எனும் நூலும் நல்லிடைநிலை அல்லது சிறந்த இடைநிலை நெறிமுறை பற்றியதாகவே உள்ளது.[13]

தெசுலெஃப், சுடோபயெசு, கீரென் ஆகியோரின் கூற்றுப்படி தியானோ இறைத்தோய்வு பற்றி நூலில் இவ்வாறு கூறுகிறாராம்[1]

பல கிரேக்கர்கள் எண்களில் இருந்து அனைத்துப் பொருள்களும் உருவாகியதாகப் பித்தகோரசு கூறியதாக நினைப்பதாக அறியவருகிறேன். இவ்வுறுதிப்பாடு ஒரு சிக்கலைத் தெறிக்கிறது: அவர் இல்லையென்று கருதிய பொருள்களை அவர் எப்படி உருவாகின்றன என கூறியிருக்க முடியும்? அவர் பொருள்கள் எண்களில் இருந்து உருவாகின்றன என்று கூறவில்லை. ஆனால் ஒழுங்கு என்பது முதன்மையான பொருளில் எண்வரிசைப்படி உள்ளது என்றும் அப்படியான வரிசைமுறையாலேயே பொருள்கள் முதல், இரண்டாம், இப்படியே பிறவும் வரிசைப்படுத்தப்பட்டு எண்ணப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 M.E. Waithe (1987). A History of Women Philosophers: Volume I: Ancient Women Philosophers, 600 B.C.-500 A.D. p. 12. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help)
 2. Plant, Ian Michael (2004). Women writers of ancient Greece and Rome: an anthology. University of Oklahoma Press. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8061-3621-9.
 3. 3.0 3.1 3.2 Porphyry, Life of Pythagoras, 4
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 Suda, Theano θ84
 5. 5.0 5.1 5.2 5.3 Diogenes Laërtius, viii. 42-3
 6. 6.0 6.1 6.2 Suda, Pythagoras π3120
 7. Suda, Theano θ83
 8. Iamblichus, On the Pythagorean Life, 132
 9. 9.0 9.1 9.2 9.3 Ian Michael Plant, (2004), Women writers of ancient Greece and Rome: an anthology, page 69. University of Oklahoma Press
 10. Mary Ellen Waithe, A History of Women Philosophers. Volume 1, 600 BC-500 AD. Springer
 11. Voula Lambropoulou, ன.Some Pythagorean female virtues, in Richard Hawley, Barbara Levick, (1995), Women in antiquity: new assessments, page 133. Routledge
 12. Russell Sturgis, Francis A. Davis (2013). Sturgis' Illustrated Dictionary of Architecture and Building: An Unabridged Reprint of the 1901-2 Edition. p. 386.
 13. Mary Ritter Beard, (1931), On understanding women, page 139. See also: Mary Ritter Beard, (1946), Woman as force in history: a study in traditions and realities, page 314.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியானோ&oldid=2712967" இலிருந்து மீள்விக்கப்பட்டது