திபெத் இமயமலை மலையேறும் வழிகாட்டிப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபெத் இமையமலை மலையேறும் வழிகாட்டிப் பள்ளி
Tibet Himalaya Mountaineering Guide School
அமைவிடம்
லாசா மாவட்டம், திபெத் தன்னாட்சிப் பகுதி
சீனா
தகவல்
நிறுவல்12 சூலை 1999
நிறுவனர்நைமா செரிங்கு

திபெத் இமயமலை மலையேறும் வழிகாட்டிப் பள்ளி (The Tibate Himalaya Mountainering Guide School) சீன நாட்டின் திபெத் தன்னாட்சிப் பகுதியான லாசா நகரத்தில் அமைந்துள்ள ஒரு மலையேறும் வழிகாட்டி பள்ளியாகும். லாசா இமயமலை மலை ஏறுதல் வழிகாட்டிப் பள்ளி, திபெத் மலையேறும் பள்ளி என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.[1]

வரலாறு.[தொகு]

மூன்று முறை எவரெசுட்டு சிகரத்தை ஏறிய நைமா செரிங்கு[2][3] என்பவரால் 1999 ஆம் ஆண்டில் இந்த பள்ளி நிறுவப்பட்டது. [4] இந்தப் பள்ளியின் பட்டதாரிகள் உலகம் முழுவதிலுமிருந்து 180 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மலையேறுபவர்களை எவரெசுட்டு சிகரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 曹梓楠. "Event marks founding of historic mountaineering school". www.chinadaily.com.cn. பார்க்கப்பட்ட நாள் 2023-01-02.
  2. tibetanreview (2016-02-26). "China to build its highest ski resort in Tibet's capital". Tibetan Review (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-02.
  3. "Mountaineering school hits new heights_Health & Education_TIBET". m.tibet.cn. பார்க்கப்பட்ட நாள் 2023-01-02.
  4. 李夏. "China's 1st professional mountaineering training school celebrates 20th anniv. in Tibet - Xinhua | English.news.cn". www.xinhuanet.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-02.