திபெத்தியப் பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திபெத் பண்பாடு நடு ஆசியாவின் மலைப்பகுதியில் அமைந்துள்ள திபெத்தில் வாழும் மக்களின் பண்பாடு ஆகும். திபெத் பண்பாடு மலைச் சுற்றாடலால், திபெத்திய பெளத்த சமயம், சீன, இந்தியப் பண்பாடுகள், மேற்கத்தைய தாக்கங்கள், இசுலாமியத் தாக்கங்கள் ஆகியவற்றை உள்வாங்கிய ஒரு தனித்துவம் மிக்க பண்பாடு ஆகும். திபெத் பண்பாட்டின் ஒரு சின்னமாக வெளி உலகால் நன்கு அறியப்பட்ட முகம் திபெத்திய பெளத்த சமய லாமா தலாய் லாமா ஆவார்.

இந்தியாவில் திபெத் பண்பாடும் அதன் பங்களிப்பும்[தொகு]

1950களில் திபெத் நிலப்பரப்பு சீனப் பொதுவுடமை அரசால் உள்வாங்கப்பட்ட போது, அப்போதைய திபெத் சமய அரசியல் தலைமையும் குறிப்பிடத்தக்க பொதுமக்களும் அகதிகளாக இந்தியா வந்தனர். இந்திய அரசு அவர்களுக்கு வாழ, அவர்களுடைய சமய பண்பாட்டைப் பேண வசதி செய்து கொடுத்தது. இன்றும் திபெத் சமூகத்தின் தலைவராகக் கொள்ளப்படும் தலாய் லாமா நாடு கடந்த நிலையில் இந்தியாவிலேயே வாழ்கின்றார்.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திபெத்தியப்_பண்பாடு&oldid=2404063" இருந்து மீள்விக்கப்பட்டது