திண்ணைப் பள்ளிக்கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திண்ணைப் பள்ளிக்கூடம் என்பது ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்ட மேற்கத்திய கல்விமுறையிலான இன்றைய பள்ளிக்கல்விமுறை முழுமையாக தமிழகத்தில் பரவுவதற்கு முன் தமிழகத்தில் நிலவிவந்த ஒரு கல்வி முறையாகும்[1]. இந்தப் பள்ளிக்கூடங்கள் ஆசிரியரின் வீட்டுத் திண்ணையில் நடந்ததால் இப்பெயர் பெற்றது. பள்ளியில் பொதுவாக ஐந்து வயது ஆனபிறகு, விசயதசமியன்று சேர்ப்பது மரபு ஆகும். மாணவர்கள் முதலில் மணலில் எழுதிப் பழக்கப்படுத்தப்படுவர். கல்வி முறை பெரும்பாலும் மனப்பாட முறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. வகுப்புத்தலைவனுக்குச் சட்டாம் பிள்ளை என்று பெயர். பள்ளி விடியற்காலையில் துவக்கப்பட்டது. [2]

சென்னை மாகாணத்தில் 1822 இல் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திண்ணைப் பள்ளிகள் இருந்ததாக அப்போது மாகாண ஆளுநராக இருந்த தாமஸ் முன்ரோ காலத்தைய கணக்கெடுப்பில் தெரியவருகிறது. அந்தக் காலத்தில் சென்னை மாகாணத்தின் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் குறைந்தபட்சம் ஒரு பள்ளி இருந்ததாகத் தெரிகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. கல்வி வளர்ச்சி
  2. பண்டைக்காலத்துப் பள்ளிக்கூடங்கள், கட்டுரை, ஆசிரியர் உ.வே.சா, நல்லுரைக் கோவை நூல் முதற் பாகம்.
  3. ஆதி (7 சூன் 2017). "எப்படியிருந்தது அந்தக் காலப் பள்ளிக்கூடம்?". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2017.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்ணைப்_பள்ளிக்கூடம்&oldid=3585317" இலிருந்து மீள்விக்கப்பட்டது