உள்ளடக்கத்துக்குச் செல்

திசைச்செறி ஒளியமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திசைச்செறி ஒளியமைப்பு (Accent lighting) என்பது ஒளியை ஒரு குறிப்பிட்ட பரப்பு அல்லது பொருளின் மேல் குவிப்பது எனப் பொருள்படும்.[1] இவ்வொளியூட்டம் பெரும்பாலும் கலை அல்லது கலைசார் கைவினைப்பொருட்களை முன்னிலைப்படுத்தப் பயன்படுகிறது.[2] சுவர் விளக்குப்பொருத்தமைப்புகள், மிகு ஒளிவிளக்குகள், மாடக்குழி விளக்குகள், தீப விளக்குகள் என்பவை பொதுவான திசைச்செறி விளக்கு வகைகளில் அடங்கும்.

திசைச்செறி விளக்கில் இருந்து வெளிப்படும் பிரகாசமான ஒளி அது பரவும் அறைக்கு காட்சிசார் ஆர்வத்தை உருவாக்குகிறது. மேலும் இவை படிக்கட்டுகள் மீது ஒளியூட்டவும், அல்லது திரையரங்குகளை ஒளியூட்டவும் நடைபாதை வெளிச்சத்திற்காகவும் பயன்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது விழுந்து அதைப் பிரகாசிக்கச் செய்வதற்காக சிலவகை விளக்குகள் தயாரிக்கப்படுவதில்லை. ஆனால் அவை தங்களுடைய சுயஒளிமூலத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் கலைவடிவங்களாக விளங்குகின்றன.[3] பெரும்பாலும் இவை ஒளி ஊடுறுவும் கண்ணாடிகளுடன் இணைத்து தயாரிக்கப்பட்டு வீடுகளை அலங்கரிக்கும் அலங்கார விளக்குகளாகப் பயன்படுகின்றன.

பாதைகளின் வழிகாட்டியாக அல்லது தோட்டக்கலை வழிகாட்டியாக உபயோகித்து திசைச்செறி விளக்குகளை வெளிப்புறங்களில் கூடப் பயன்படுத்த முடியும்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lighting Definitions". Mavin Dyck. Archived from the original on 23 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 19 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Basic Types Of Lighting". Lighting Fundamentals. American Lighting Association. Archived from the original on 20 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Accent lights with Tiffany Glass".
  4. "3 Basic Types of Lighting". HGTV. பார்க்கப்பட்ட நாள் 23 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திசைச்செறி_ஒளியமைப்பு&oldid=3930819" இலிருந்து மீள்விக்கப்பட்டது