திசா பதானி

திசா பதானி என்பவர் இந்தியாவைச் சேர்ந்த நடிகை ஆவார். அவர் இந்தி படங்களில் முதன்மையாக பணியாற்றுகிறார். வருண் தேஜாவிற்கு ஜோடியாக 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான லோஃபர் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 2016 ஆம் ஆண்டில் விளையாட்டு வாழ்க்கை வரலாற்றான எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப் படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானர். 2017 ஆம் ஆண்டில் சீன அதிரடி நகைச்சுவை திரைப்படமான குங் ஃபூ யோகாவில் நடித்தார். இந்த திரைப்படம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த சீன திரைப்படங்களில் ஒன்றாகும் . வணிக ரீதியாக வெற்றி பெற்ற இந்தி மொழி அதிரடி திரைப் படங்களான பாகி 2 (2018) மற்றும் பாரத் (2019) ஆகிய என்பவற்றில் நடித்தார்.
திரைத்துறையில்
[தொகு]திசா பதானி 2015 ஆம் ஆண்டில் வருண் தேஜுவுடன் தெலுங்குத் திரைப்படமான லோஃபர் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.[1] கட்டாய திருமணத்திலிருந்து தப்பிக்க வீட்டிலிருந்து ஓடும் மவ்னி என்ற பெண்ணின் பாத்திரத்தில் நடித்தார்.[2] இந்த திரைப்படத்தை பூரி ஜகந்நாத் இயக்கினார். மேலும் இத்திரைப்படத்தை சி.கே. என்டர்டெயின்மென்ட்டின் கீழ் சி. கல்யாண் தயாரித்தார். இப்படம் 200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. பாக்ஸ் ஆபிஸில் 106 மில்லியன் டாலர் வசூலைப் பெற்றது.[3] திசா பதானி 2016 ஆம் ஆண்டில் டைகர் ஷிராஃப் உடன் டி- சீரிஸின் கீழ் பூஷண் குமார் மற்றும் கிருஷன் குமார் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட மற்றும் மீட் பிரதர்ஸ் இசையமைத்த இசைக் காணொளியில் தோன்றினார். மீட் பிரதர்ஸ் எழுதி இயக்கிய இக் காணொளிக்கு பாடகர் அதிதி சிங் சர்மா குரலைக் கொடுத்தார். [சான்று தேவை]
நீரஜ் பாண்டேவின் இயக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை வரலாற்று விளையாட்டுத் திரைப்படமான நீரஜ் பாண்டேவின் எம்.எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நடித்தார்.[4] திசா பதானி கார் விபத்தில் இறந்த மகேந்திர சிங் தோனியின் காதலி பிரியங்கா ஜா என்ற பாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் சுசாந்த் ராஜ்புத், கியாரா அத்வானி ஆகியோரும் நடித்துள்ளனர். நீரஜ் பாண்டே இயக்கி, பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று வெளியிடப்பட்டது. இது 2.16 பில்லியன் வசூல் மூலம் மாபெரும் வெற்றி பெற்றது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் திஷா இருவருக்கும் அதிக வசூல் செய்த படமாக கருதப்படுகின்றது.[5] இதில் திசாவின் நடிப்பு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. திசா பதானி சோனு சூட் உடன் ஜாக்கி சானின் நகைச்சுவை அதிரடி திரைப்படமான குங் ஃபூ யோகாவிலும் நடித்தார். குங் ஃபூ யோகா 2017 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது.[6]
பதானி பின்னர் பாகி 2 இல் டைகர் ஷிராஃப் உடன் இணைந்து நடித்தார். இது 2016 ஆம் ஆண்டின் வெற்றிப் படமான பாகியில் டைகர் ஷிராஃப், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் நடித்துள்ளனர. இந்த திரைப்படத்தை சஜித் நதியாட்வாலா தயாரித்து, அகமது கான் இயக்கியுள்ளார். இப்படம் 2018 ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. சுமார் ₹ 243 கோடி வசூலை பெற்றது.[7]
பிரபலங்கள் பலர் தங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்கி வருவதாகவும், தற்போது திஷா பதானி தனது யூடியூப் சேனலையும் தொடங்கவிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளிவந்தது.[8]
சான்றுகள்
[தொகு]- ↑ "Varun Tej - Puri Jagannadh film titled 'Loafer' - Telugu News". IndiaGlitz.com. 2015-06-21. Retrieved 2019-12-04.
- ↑ "Loafer Telugu Movie Review, Rating | Story, Public Talk". Gulte (in english). 2015-12-17. Retrieved 2019-12-04.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ ""Loafer reaches Half-Way Mark"".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Disha Patani to play MS Dhoni's ex-girlfriend - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2019-12-04.
- ↑ Hungama, Bollywood (2016-10-01). "Box Office: Worldwide Collections and Day wise breakup of M.S. Dhoni – The Untold Story :Bollywood Box Office - Bollywood Hungama" (in ஆங்கிலம்). Retrieved 2019-12-04.
- ↑ "功夫瑜伽 (豆瓣)". movie.douban.com. Retrieved 2019-12-04.
- ↑ "'Baaghi 2' worldwide box-office collection: Tiger Shroff and Disha Patani's film on an impressive run - Times of India ►". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2019-12-04.
- ↑ "Disha Patani launches her YouTube channel – Bollywood Galiyara" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2019-12-04.[தொடர்பிழந்த இணைப்பு]