திக்குப் பாலகர்
தோற்றம்
திக்குப் பாலகர் என்னும் சொல் திசைகாப்பாளரைக் குறிக்கும். இது சோதிடக்கலையின் ஒரு கணிப்பு. திசையை எண்கோணமாக்கி, ஒவ்வொரு திசைக்கும் சில இருப்புகளைக் காட்டுவது இதன் நெறி. கோணத்திசைகளில் குறிப்பிட்ட தெய்வங்கள் இருந்து காப்பதாக எண்ணிக் கணிப்பர்.[1]
| திசை காக்கும் தெய்வம் | திசை | சின்னம் | திசையானையின் பெயர் | திசையின் பெயர் |
|---|---|---|---|---|
| இந்திரன் | கிழக்கு | கொடி | ஐராவதம் | அருகன் திசை |
| அங்கி | தென்கிழக்கு | பூனை | புண்டரீகம் | |
| இயமன் | தெற்கு | சீயம் | வாமனம் | |
| நிருதி | தென்மேற்கு | ஞாளி | குமுதம் | |
| வருணன் | மேற்கு | இடபம் | அஞ்ஞானம் | |
| வாயு | வடமேற்கு | கழுதை | புட்ப-தந்தம் | |
| குபேரன் | வடக்கு | யானை | சார்வபூமம் | சோமன் திசை |
| ஈசானன் | வடகிழக்கு | காகம் | சுப்ரதீகம் |
கருவிநூல்
[தொகு]- சேந்தன் திவாகரம், பல்பெயர் கூட்டத் தொகுபெயர்த் தொகுதி, பதிப்பு, செவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1958
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ சேந்தன் திவாகரம், பல்பெயர் கூட்டத் தொகுபெயர்த் தொகுதி, பக்கம் 239