தாலத்து (அளவீடு)
தாலத்து (Talent) என்பது மெசபடோமியாவில் கிமு 4 ஆம் ஆயிரமாண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு எடை அலகு ஆகும். இந்த அளவீடானது 3 ஆம் ஆயிரமாண்டின் இறுதியில் அக்காடியன்-சுமர் காலக் கட்டத்தின் போது 60 மினாக்கள் அல்லது 360 ஷெக்கல்களாக (தோராயமாக 11 கிராம் வெள்ளி நாணயம்) பிரிக்கப்பட்டது. செவ்வியல் பழங்காலத்தில், தாலத்து ( இலத்தீன்: talentum , பண்டைய கிரேக்கத்தில் இருந்து : τάλαντον , talanton "அளவு, இருப்பு, தொகை") வணிக பரிவர்த்தனைகளுக்கான பொதுவான எடை அலகுகளில் மிகவும் பெரியது ஆகும். ஒரு அட்டிக்கா தாலத்து தோராயமாக 26.0 கிரோகிராம்கள் (57 பவுண்ட் 5 அவுன்ஸ்). [1] கொண்டது. ஒரு பாபிலோனிய தாலத்து 30.2 கிலோ (66 பவுண்ட் 9 அவுன்ஸ்). கொண்டது. [2] பண்டைய இஸ்ரேல் பாபிலோனிய நிரையான தாலத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால் பின்னர் அதை திருத்தியமைத்துக்கொண்டது. [3] புதிய ஏற்பாடு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொதுவான தாலத்து 58.9 கிலோ (129 பவுண்ட் 14 அவுன்ஸ்) ஆகும். [3] ஒரு ரோமானிய தாலத்து (100 லபிரிகளாக பிரிக்கப்பட்டது) 1+1⁄3 அட்டிக் தாலத்துகள், தோராயமாக 32.3 கிலோ (71 பவுண்ட் 3 அவுன்ஸ்); ஒரு எகிப்திய தாலத்து 80 லபிரி, [1] தோராயமாக 27 கிலோ (60 பவுண்டு) ஆகும். [1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 John William Humphrey, John Peter Oleson, Andrew Neil Sherwood, Greek and Roman technology, p. 487.
- ↑ Herodotus, Robin Waterfield and Carolyn Dewald, The Histories (1998), p. 593.
- ↑ 3.0 3.1 "III. Measures of Weight:", Jewish Encyclopedia.