தாய்ப்பால் வங்கி
தாய்ப்பால் வங்கி அல்லது மனித பால் வங்கி என்பது தாய்மார்களிடம் தாய்ப்பாலை வாங்கி, பதப்படுத்தி சேமித்து வேண்டுவோருக்கு தருகின்ற அமைப்பாகும். இந்த தாய்ப்பால் வங்கி தாயை இழந்த குழந்தைகளுக்கும், தாய்பால் சரிவர சுரக்காத குழந்தைகளுக்கும் போதிய தாய்ப்பால் கிடைக்க உதவுகிறது. மேலும் மருத்துவமனைகளில் நேயால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், குழந்தைகள் சேர்ந்து இருக்க முடியாத சூழ்நிலையிலும் அக்குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்க உதவுகிறது.[1]
தானமாக வரும் தாய்ப்பாலை சுத்திகரிப்பு செய்த பின்னர் எடை மற்றும் நோய் குறைபாடுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் தாய்ப்பாலை தானமாக தர விரும்பும் தாய்மார்கள் அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு உபரி தாய்ப்பாலை தானமாக தரலாம்.[2]
செவிலித்தாய்
[தொகு]பண்டைய காலங்களில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க இயலாத சூழலில் குழந்தை பெற்ற வேறாரு தாயை செவிலித்தாயாக நியமித்தனர். கூட்டுக்குடும்பங்களில் உறவினப் பெண்களே தாய்ப்பாலை தந்துள்ளனர்.
சாதனைப் பெண்
[தொகு]தமிழ்நாடு மாநிலத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா என்ற இருப்த்தி ஏழு வயது பெண் ஏழு மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்துள்ளார். இதனை சாதனையாக கருதி 'ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டஸ்' அங்கீகரித்துள்ளது.[3]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Read all Latest Updates on and about தாய்ப்பால் வங்கி திட்டம்". www.maalaimalar.com.
- ↑ "உலக தாய்ப்பால் வாரம்: திருப்பூர் அரசு மருத்துவனையில் துவங்கப்பட்ட தாய்ப்பால் வங்கி". Puthiyathalaimurai.
- ↑ "தாய்ப்பால் தானம் என்றால் என்ன? 105 லிட்டர் தானம் செய்த கோவை பெண் ஸ்ரீவித்யா - இது பாதுகாப்பானதா?". BBC News தமிழ். 30 ஜன., 2023.
{{cite web}}
: Check date values in:|date=
(help)