தாமிர செலீனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிர செலீனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாமிர செலீனைடு
இனங்காட்டிகள்
20405-64-5
EC number 243-796-7
InChI
 • InChI=1S/2Cu.Se
  Key: KTLOQXXVQYUCJU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6914519
 • [Cu].[Cu].[Se]
UNII 44P3QN57K9
பண்புகள்
Cu2Se
வாய்ப்பாட்டு எடை 206.06 g·mol−1
தோற்றம் அடர் நீலம், கருப்பு
அடர்த்தி 6.84 கி/மில்லி[1]
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H201, H331, H373, H400, H410
P260, P261, P264, P270, P271, P273, P301+310, P304+340, P311, P314, P321, P330, P391, P403+233
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தாமிர செலீனைடு (Copper selenide) என்பது Cu2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிரமும் செலீனியமும் சேர்ந்து ஓர் இரும சேர்மமாக இது உருவாகிறது. சிலசமயங்களில் CuSe என்ற வாய்ப்பாட்டாலும் குறிக்கப்படுகிறது.

படிக அமைப்பும் மின்னணு நடத்தையும் இதன் அடிப்படை கூறுகளின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.[2] விகிதவியல் அளவிலான தாமிர செலீனைடு, உலோகம் போன்ற நடத்தை கொண்ட சுழிய கற்றை இடைவெளி கொண்ட ஒரு பொருளாகும்.[3] தாமிரம்-குறைபாடுள்ள விகிதவியல் அளவில் இல்லாத Cu2-xSe என்ற வாய்ப்பாட்டில் உள்ளது முறையே 2.1–2.3 எலக்ட்ரான் வோல்ட்டு மற்றும் 1.2–1.4 எலக்ட்ரான் வோல்ட்டு வரம்பில் நேரடி மற்றும் மறைமுக கற்றை இடைவெளி ஆற்றல்களைக் கொண்ட ஓர் உள்ளார்ந்த p-வகை குறைக்கடத்தி ஆகும்.[4]

தாமிர செலீனைடு மீநுண் துகள்கள் அல்லது பிற மீநுண் கட்டமைப்புகளாக அடிக்கடி வளர்க்கப்படுகிறது.[5][6][7]

பயன்கள்[தொகு]

சில மந்தமாக்கும் செயல்முறைகளில் இரும்பு அல்லது எஃகு பாகங்களில் ஒரு பாதுகாப்பான கருப்பு பூச்சை உருவாக்க தாமிர செலீனைடு அத்தளத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.[8] இந்த முறையில் செயல்படும் மந்தமாக்கும் கரைசல்கள் பொதுவாக செலீனசு அமிலம் அல்லது செலீனியம் டை ஆக்சைடு கொண்டதாக பெயரிடப்படும்.[9][10] மேலும், தாமிர செலீனைடை பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுவதற்கும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இயற்கைத் தோற்றம்[தொகு]

தாமிர செலீனைடுகள் மிகவும் பொதுவான செலீனியம் தாதுக்களாகும். கனிமவியலில் CuSe கிளாக்மேனைட்டு எனப்படுகிறது.[11] அதேசமயத்தில் Cu2Se பெர்செலீயனைட்டு,[12] பெல்லிடோயைட்டு என்ற இரண்டு பல்லுருத் தோற்றங்களாக கிடைக்கிறது. இவற்றைத்தவிர உமாங்கைட்டு, அதாபாசுகைட்டு போன்ற தாமிரசெலீனியக் கனிமங்களும் இயற்கையில் கிடைக்கின்றன.[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Copper (I) selenide". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.
 2. Lanling, Zhao; Wang, Xiaolin; F. Yun, Frank (5 February 2015). "The Effects of Te2− and I− Substitutions on the Electronic Structures, Thermoelectric Performance, and Hardness in Melt-Quenched Highly Dense Cu2-xSe". Advanced Electronic Materials 1 (3). doi:10.1002/aelm.201400015. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/aelm.201400015. பார்த்த நாள்: 28 June 2021. 
 3. Tyagi, Kriti; Gahtori, Bhasker (June 2015). "Enhanced thermoelectric performance of spark plasma sintered copper-deficient nanostructured copper selenide". Journal of Physics and Chemistry of Solids 81: 100–105. doi:10.1016/j.jpcs.2015.01.018. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022369715000293. 
 4. C. Singh, Subhash (September 2018). "Structural and compositional control in copper selenide nanocrystals for light-induced self-repairable electrodes". Nano Energy 51: 774–785. doi:10.1016/j.nanoen.2018.07.020. பப்மெட்:30177955. 
 5. Xiao, Guanjun; Ning, Jiajia; Liu, Zhaoyang; Sui, Yongming; Wang, Yingnan; Dong, Qingfeng; Tian, Wenjing; Liu, Bingbing et al. (2012). "Solution synthesis of copper selenide nanocrystals and their electrical transport properties" (in en). CrystEngComm 14 (6): 2139. doi:10.1039/c2ce06270d. 
 6. Hessel, Colin M.; Pattani, Varun P.; Rasch, Michael; Panthani, Matthew G.; Koo, Bonil; Tunnell, James W.; Korgel, Brian A. (2011-05-10). "Copper Selenide Nanocrystals for Photothermal Therapy" (in EN). Nano Letters 11 (6): 2560–2566. doi:10.1021/nl201400z. பப்மெட்:21553924. 
 7. Patidar, D.; Saxena, N. S. (2012-03-15). "Characterization of single phase copper selenide nanoparticles and their growth mechanism". Journal of Crystal Growth 343 (1): 68–72. doi:10.1016/j.jcrysgro.2012.01.026. 
 8. "Room Temperature Black Oxide". Archived from the original on 28 ஏப்பிரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.
 9. "Insta-Blak 333 MSDS" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.
 10. "Oxpho-Blue MSDS" (PDF). பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.
 11. Berry, L. G. (1954). "The crystal structure of covellite, cuse and klockmannite, cuse". American Mineralogist 39 (5–6): 504–509. https://pubs.geoscienceworld.org/msa/ammin/article-abstract/39/5-6/504/539369. 
 12. Harris, D. C.; Cabri, L. J.; Murray, E. J. (1970). "An occurrence of a sulphur-bearing berzelianite". The Canadian Mineralogist: 737–740. http://rruff.info/uploads/CM10_737.pdf. 
 13. Harris, D. C.; Cabri, L. J.; Kaiman, S. (1970). "Athabascaite: A New Copper Selenide Mineral from Martin Lake, Saskatchewan". The Canadian Mineralogist 10 (2): 207–215. https://pubs.geoscienceworld.org/canmin/article-abstract/10/2/207/10746/athabascaite-a-new-copper-selenide-mineral-from. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிர_செலீனைடு&oldid=3923301" இலிருந்து மீள்விக்கப்பட்டது