தாமஸ் பேபிங்டன் மெக்காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமஸ் பேபிங்டன் மெக்காலி
போர்ச் செயலர்
பதவியில்
27 செப்டம்பர், 1839 – 30 ஆகத்து, 1841
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா
பதவியில்
7 சூலை, 1846 – 8 மே 1848
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1800-10-25)25 அக்டோபர் 1800
இலீசெஸ்டர்சயர், இங்கிலாந்து
இறப்பு28 திசம்பர் 1859(1859-12-28) (அகவை 59)
இலண்டன், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
அரசியல் கட்சிவிக்
முன்னாள் கல்லூரிதிரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்
வேலைஅரசியல்வாதி
தொழில்வரலாற்றாசிரியர்
கையெழுத்து

தாமஸ் பேபிங்டன் மெக்காலி (Thomas Babington Macaulay/ˈbæbɪŋtən məˈkɔːli/ 25 அக்டோபர் 1800-28 -டிசம்பர் 1859) பரவலாக மெக்காலே என அறியப்படும் இவர் ஒரு பிரித்தானிய வரலாற்றாசிரியரும், 1839 முதல் 1841 வரை போர்ச் செயலாளராகவும், 1846 முதல் 1848 வரை ஆட்சிக் குழுத் தளபதியும் அரசியல்வாதியாகவும் இருந்தவர் ஆவார்.

மேற்கத்திய ஐரோப்பிய கலாச்சாரத்தின் மேன்மை மற்றும் அதன் சமூக-அரசியல் முன்னேற்றம் குறித்தான தனது வாதத்தை வெளிப்படுத்திய மெக்காலியின் தி ஹிஸ்டரி ஆஃப் இங்கிலாந்து, விக் வரலாற்றின் உரைநடை பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டகப் பார்க்கப்படுகிறது.[1]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

மெக்காலி 1800 அக்டோபர் 25இல் இலீசெஸ்டர்சயரில் உள்ள இரோத்லி டெம்பிளில் பிறந்தார்.[2] இவரது தந்தை சாச்சாரி மெக்காலி இசுக்காட்லாந்தின் காலனித்துவ ஆளுநரும் ஒழிப்புவாதியும் ஹன்னா மோரின் முன்னாள் மாணவரும் ஆவார்.[3] அவர்கள் தங்கள் முதல் குழந்தைக்கு இவரது மாமா தாமஸ் பாபிங்டன், லீசெஸ்டர்ஷைர் நில உரிமையாளர் மற்றும் அரசியல்வாதியின் பெயரை வைத்தனர்.[4][5][6]

இந்தியா (1834-1838)[தொகு]

ஜான் பார்ட்ரிட்ஜ் வரைந்த மெக்காலி

1830 ஆம் ஆண்டில் மெக்காலே, இலான்ஸ்டவுன் மார்க்வெஸின் அழைப்பை ஏற்றுக்கொண்டு கால்னேவின் பாக்கெட் பெருநகரத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார். நாடாளுமன்றத்தில் மெக்காலேயின் முதல் உரை இங்கிலாந்தில் உள்ள யூதர்களின் குடிமையியல் குறைபாடுகளை ஒழிக்க வேண்டும் என்று வாதிட்டது. மனித குலத்திற்கான பங்களிப்புகளில் இசுலாம் மற்றும் இந்து மதம் உலகிற்கு மிகக் குறைவான பங்களிப்பை வழங்கியதாகவும் அரபு, பாரசீக, சமஸ்கிருத இலக்கியங்கள் சிறிதளவு பங்களிப்பை வழங்கியுள்ளன என்றும் இவர் விரிவாக எழுதினார்.[7] நாடாளுமன்றச் சீர்திருத்தத்திற்கு ஆதரவாக மெக்காலே தொடர்ந்து ஆற்றிய உரைகள் பாராட்டப்பட்டன.[8] 1833 ஆம் ஆண்டு சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து லீட்ஸ் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனார், இதன் மூலம் கால்னேவின் பிரதிநிதித்துவம் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டது, இதற்கு முன்பு பிரதிநிதித்துவம் செய்யப்படாத லீட்ஸ் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. MacKenzie, John (January 2013), "A family empire", BBC History Magazine {{citation}}: Missing or empty |url= (help)
  2. Biographical index of former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002 (PDF). The Royal Society of Edinburgh. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 090219884X.
  3. "Thomas Babbington Macaulay". Josephsmithacademy. Archived from the original on 12 May 2018. பார்க்கப்பட்ட நாள் 10 October 2013.
  4. Symonds, P. A. "Babington, Thomas (1758–1837), of Rothley Temple, nr. Leicester". History of Parliament on-line. Institute of Historical Research. பார்க்கப்பட்ட நாள் 3 September 2016.
  5. Kuper 2009, ப. 146.
  6. Knight 1867, ப. 8.
  7. Thomas, William "Macaulay, Thomas Babington, Baron Macaulay (1800–1859), historian, essayist, and poet". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/17349.  (Subscription or UK public library membership required.)
  8. Thomas, William "Macaulay, Thomas Babington, Baron Macaulay (1800–1859), historian, essayist, and poet". Oxford Dictionary of National Biography (online). Oxford University Press. DOI:10.1093/ref:odnb/17349.  (Subscription or UK public library membership required.)