தாமசு ராபர்ட் போலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாமசு ராபர்ட் போலம் (Thomas Robert Bolam) 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரித்தானிய வேதியியலாளர் ஆவார். எடின்பரோ இராயல் கழக உறுப்பினர் என்ற சிறப்பையும் இராணுவப் பதக்கம் பெற்றவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. 1893 முதல் 1969 வரையிலான காலத்தில் போலம் வாழ்ந்தார்.

வாழ்க்கை[தொகு]

1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 அன்று பிரிசுடலில் போலம் பிறந்தார். பேர்ஃபீல்டு உயர்தர பள்ளி மற்றும் பிரிசுடலில் உள்ள வணிகர் கூட்டமைப்பு அறக்கட்டளை நடத்தும் பள்ளிகளில் கல்வி பயின்றார். 1914 ஆம் ஆண்ட்டு பிரிசுடல் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். முதல் உலகப் போரின் தொடக்கத்தில் போலம் ராயல் பொறியாளர்கள் என்ற இராணுவப் படைப்பிரிவில் சேர்ந்து பிரான்சிலும், பிளாண்டர்சிலும் பணிபுரிந்தார். [அடைப்பிரிவில் சிறப்பான பணிக்புரிந்தமைக்காக போலமிற்கு இராணுவ பதக்கம் வழங்கப்பட்டது. பிரிசுடலுக்குத் திரும்பிய இவர் 1920 ஆம் ஆண்டு அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்றார். எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணிபுரியத் தொடங்கி 1930 ஆம் ஆண்டு இதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். [1] [2]

1933 ஆம் ஆண்டில் போலம் எடின்பர்க் ராயல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர் யேம்சு வாக்கர், யேம்சு பிக்கரிங் கெண்டல், ஏர்னசுட்டு போமன் லுத்லாம் மற்றும் லியோனார்ட் தோபின் ஆகியோர் இவரை முன்மொழிந்து ஆதரித்தனர். சங்கத்தின் துணைத் தலைவராக 1959 முதல் 1962 வரை போலம் பணியாற்றினார். [1]

இரண்டாம் உலகப் போரில் இவர் எடின்பர்க் விமானப் படையில் பாதுகாவலராகப் பணியாற்றினார். 1969 ஆம் ஆண்டு சூலை மாதம் 8 அன்று போலம் எடின்பர்க்கில் காலமானார்.

குடும்பம்[தொகு]

1926 இல் போலம் மேரி ரசல் மெக்கன்சியை மணந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

வெளியீடுகள்[தொகு]

  • The Donnan Equilibrium (1932)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_ராபர்ட்_போலம்&oldid=3215829" இலிருந்து மீள்விக்கப்பட்டது