தான எழுத்துமுறை
தோற்றம்
| தான (ތާނަ) | |
|---|---|
| எழுத்து முறை வகை | |
| திசை | Right-to-left |
| மொழிகள் | திவேயி மொழி |
| தொடர்புடைய எழுத்து முறைகள் | |
மூல முறைகள் | |
| சீ.அ.நி 15924 | |
| சீ.அ.நி 15924 | Thaa (170), Thaana |
| ஒருங்குறி | |
ஒருங்குறி மாற்றுப்பெயர் | Thaana |
| U+0780–U+07BF | |
தான எழுத்துமுறை (ތާނަ) என்பது திவேயி மொழியின் எழுத்துமுறை. மாலைத்தீவுகளில் பயன்படுத்தப்படுகிறது. அரபு, எபிரேயத்தின் போல், தானவும் வலமிருந்து இடமாக எழுத்தப்படும் எழுத்துமுறை. இந்து-அரபு எணுருக்களிலிருந்தும் அரபு எழுத்துமுறையின் உயிரெழுத்துக் குறியீட்டுக்களிலிருந்தும் தான எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.[1][2][3]
முதலில் பிராமி குடும்பத்தைச் சேர்ந்த திவேஸ் அகுரு எழுத்துமுறையை திவேயியை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் 18ஆம் நூற்றாண்டில் மெதுவாக தான எழுத்துமுறை இதற்கு மாற்றாக வழக்கத்தில் வந்துள்ளது.
எழுத்து வடிவங்கள்
[தொகு]உயிர் எழுத்துக்கள்
[தொகு]| உயிர் எழுத்து | 'க'கர உயிர்மெய் | ஒத்த தமிழ் எழுத்து | IPA | குறிப்பு | |
|---|---|---|---|---|---|
| އަ | ކަ | (க) | அ | a | அபஃபிலி |
| އާ | ކާ | (கா) | ஆ | aː | ஆபாஃபிலி |
| އި | ކި | (கி) | இ | i | இபிஃபிலி |
| އީ | ކީ | (கீ) | ஈ | iː | ஈபீஃபிலி |
| އު | ކު | (கு) | உ | u | உபுஃபிலி |
| އޫ | ކޫ | (கூ) | ஊ | uː | ஊபூஃபிலி |
| އެ | ކެ | (கெ) | எ | e | எபெஃபிலி |
| އޭ | ކޭ | (கே) | ஏ | eː | ஏபேஃபிலி |
| އޮ | ކޮ | (கொ) | ஒ | o | ஒபொஃபிலி |
| އޯ | ކޯ | (கோ) | ஓ | oː | ஓபோஃபிலி |
மெய்யெழுத்துக்கள்
[தொகு]சொந்த மெய்யெழுத்துக்கள்
[தொகு]| தான எழுத்து | தான பெயர் | ஒத்த தமிழ் எழுத்து | IPA |
|---|---|---|---|
| ހ | ஹா | ஹ | h |
| ށ | ஷவியானி | ஷ | ʃ |
| ނ | நூநு | ந | n̪ |
| ރ | ரா | ர | ɾ |
| ބ | பா | ப - க'ப'ம் | b |
| ޅ | ளவியானி | ள | ɭ |
| ކ | காஃபு | க | k |
| ވ | வாவு | வ | ʋ |
| މ | மீமு | ம | m |
| ފ | ஃபாஃபு | ஃப | f |
| ދ | தாலு | த-ம'த'ம் | d̪ |
| ތ | தா | த | t̪ |
| ލ | லாமு | ல | l |
| ގ | காஃபு | க-ம'க'ன் | ɡ |
| ޏ | ஞவியானி | ஞ | ɲ |
| ސ | ஸீனு | ஸ | s̺ |
| ޑ | டவியானி | ட-ம'ட'ம் | ɖ |
| ޒ | ஸவியானி | ஃஸ (தமிழில் இல்லாத ஒலிப்பு) | z̺ |
| ޓ | டவியானி | ட | ʈ |
| ޔ | யா | ய | j |
| ޕ | பவியானி | ப | p |
| ޖ | ஜவியானி | ஜ | dʒ |
| ޗ | சவியானி | ச | tʃ |
அரபு மெய்யொலிகளை எழுதுவதற்கான மெய்யெழுத்துக்கள்
[தொகு]| தான எழுத்து | தான பெயர் | ஒத்த அரபு எழுத்து | IPA |
|---|---|---|---|
| ޘ | த்தா | ث | θ |
| ޙ | ஹ்ஹா | ح | ħ |
| ޚ | க்கா | خ | x~χ |
| ޛ | தாலு | ذ | ð |
| ޜ | ஃஸா | ʒ | |
| ޝ | ஷீனு | ش | ʃ |
| ޞ | ஸாது | ص | sˁ |
| ޟ | தாது | ض | dˁ |
| ޠ | தோ | ط | tˁ |
| ޡ | ஃஸோ | ظ | ðˁ~zˁ |
| ޢ | அயினு | ع | ʕ |
| ޣ | கயினு | غ | ɣ |
| ޤ | காஃபு | ق | q |
| ޥ | வாவு | و | w |
சிறப்பு எழுத்துக்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-7254-801-5
- ↑ Pandey, Anshuman (2018-01-23) (in en). Proposal to encode Dives Akuru in Unicode. பக். 108–109. https://escholarship.org/uc/item/4q4356c9. பார்த்த நாள்: 2021-07-30.
- ↑ Geiger, Wilhelm (1919). "Máldivian linguistic studies". Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society XXVII (Extra). https://archive.org/details/jornalofceylonbr27wilh.
| தான எழுத்து | தான பெயர் | செயற்பாடு |
|---|---|---|
| އ | அலிஃபு | உயிரெழுத்தை தனியாக எழுதுவதற்காக பயன்படுத்தப்படுகிறது |
| އް | சுகூன் | இவ்வெழுத்துக்கு பிறகு வருகிற மெய்யொலியை அழுத்தி உச்சரிக்க வேண்டும் என்று குறிக்கும் |
| ޱ | ணவியானி | 'ண'கரத்தை குறிக்கிற எழுத்து. இப்பொழுது வழக்கத்தில் இல்லை |