தான்ரசு கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உஸ்தாத் தான்ரசு கான்
பிறப்புமீர் குதுப் பக்ச்[1]
அறியப்படவில்லை
இறப்பு1885 அல்லது 1890[1][2]
தேசியம்பிரித்தானிய இந்தியா
பணிபாடகர், அரசவையின் இசைக்கலைஞர், பேரரசரின் இசை ஆசிரியர்[2]

உஸ்தாத் தான்ரசு கான் (Ustad Tanrus Khan) (இறப்பு 1885 அல்லது 1890) இவர் தில்லி கரானவின்ன் (பாடும் பாணி) இந்துஸ்தானி இசை பாரம்பரியத்தின் நிறுவனராவார். [2] [3] கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் சா சாபரின் அரசவை இசைக்கலைஞராகவும், அவருக்கு இசை ஆசிரியராகவும் இருந்தார்.

ஆரம்பகால வாழ்க்கையும், தொழிலும்[தொகு]

"மீர் குதுப் பக்ச் அல்லது 'தான்ரசு கான்' 19 ஆம் நூற்றாண்டின் ஒரு கியால் பாடகர் ஆவார்." [1] "தில்லி வட இந்திய இசை பாரம்பரியத்தின் தலைநகரமாகவும், கலாச்சார மையமாகவும் இருந்ததால், பல குடும்பங்கள் முதலில் தில்லியில் இருந்து வந்தன." [2] " இவர் தனது விரைவான, பிரகாசமான இசையால் பிரபலமானவர். எனவே 'தான்ரசு' (அழகான குரலினைக் கொண்டவர்) என்ற தலைப்பை இவருக்கு கடைசி முகலாயப் பேரரசரான பகதூர் சா சாபர் வழங்கினார்."

ஐதராபாத்தில் வாழ்க்கை[தொகு]

எப்போதாவது இவர் கவ்வாலிப்பாடல்களையும் பாடினார். எனவே அவர் 13 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் அமீர் குஸ்ரோவால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கவ்வாலி பச்சோன் கா தில்லி கரானா'வின் உறுப்பினராகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்துஸ்தானி இசையின் பல கியால்கள் மற்றும் தாரனங்கள் இவரால் பாடப்பட்டன. [1] இவர் தில் அரசவையில் இணைக்கப்பட்டார். ஆனால் 1857 கலகத்திற்குப் பிறகு, இவர் தில்லியை விட்டு வெளியேறி குவாலியர் சென்றார். ஆனால் தான் அங்கு பெரிதும் பாராட்டப்படவில்லை என்று உணர்ந்தார். எனவே ஐதராபாத்தின் நிசாமின் அரசவைக்குச் சென்று அங்கு பணிபுரிந்து கடைசியில் 1885 இல் அங்கேயே இறந்தார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தான்ரசு_கான்&oldid=3076591" இருந்து மீள்விக்கப்பட்டது