உள்ளடக்கத்துக்குச் செல்

தாசரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாசரதி

தாசரதி என்று பிரபலமாக அறியப்படும் தாசரதி கிருஷ்ணமாச்சார்யா (Daasarathi krishnamacharya) (22 ஜூலை 1925 - 5 நவம்பர் 1987) ஓர் தெலுங்குக் கவிஞரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார். தாசரதி அபியுதய கவி, கலாபிரபூர்ணா என்ற பட்டங்களை பெற்றுள்ளார்.[1] 1974 இல் திமிரம்தோ சமரம் (இருளுக்கு எதிரான போராட்டம்) என்ற கவிதைப் புத்தகத்திற்காக சாகித்திய அகாதமி விருதையும் பெற்றார்.[2] மேலும்,ஆந்திர அரசின் அரசுக் கவியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

செயல்பாடுகள்

[தொகு]

இடதுசாரி ஆந்திர மகாசபா இயக்கத்தில் தன்னார்வலராக இருந்த தாசரதி, தெலங்கானாவில் கிராமம் கிராமமாகச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மகாத்மா காந்தியும் கந்துகூரி வீரேசலிங்கமும் இவரைப் பாதித்தனர். இருப்பினும், இவரது நண்பர்களில் பெரும்பாலோர் இடதுசாரிகள் மற்றும் பொதுவுடைமை புரட்சியாளர்களாக இருந்ததால், இவர் அரசியல் இடதுசாரிகளுடன் சேர்ந்தார்.

கவிஞராக

[தொகு]

இவர் மாணவராக இருந்தபோதே கவிதை எழுதத் தொடங்கினார். இவரது கவிதைகள் புரட்சிகரமாக இருந்தது. மேலும், கார்ல் மார்க்சின் பொதுவுடைமை சித்தாந்தத்தால் பாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட, ஏழை, சுரண்டப்பட்ட, தொழிலாளர்கள் இவரது கவிதைகளில் இடம் பெற்றனர். ஐதராபாத் நிசாம் ஆட்சியின் கீழ் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ மற்றும் எதேச்சதிகார சமூகம் ஜனநாயகம் மற்றும் சமத்துவத்திற்கு வழிவகுக்கும் என்று தான் உறுதியாக நம்பினார்.

இவருடைய இளைய சகோதரர் தாசரதி ரங்காச்சாரியாவும் ஒரு எழுத்தாளர் ஆவார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kavitha pushpakam Intro" (PDF). Archived from the original (PDF) on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 9 March 2008.
  2. Sahitya Akademi Awardees பரணிடப்பட்டது 23 சூன் 2006 at the வந்தவழி இயந்திரம்
  3. "Telangana's Voice Dasarathi No More". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 9 June 2015. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசரதி&oldid=3920355" இலிருந்து மீள்விக்கப்பட்டது