தளர்நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொறியியல் மற்றும் பொருளறிவியலில் பொருள் ஒன்றின் தளர்நிலை (yield strength அல்லது yield point) என்பது அப்பொருள் நெகிழ்வுத் தன்மையை அடைய ஆரம்பிக்கும் போது அதன் தகைவைக் குறிக்கும்.

உருக்கு அல்லது செம்பாலான ஒரு கம்பி அல்லது கோல், மெதுவாக அதிகரிக்கின்ற ஒரு இழுவிசைக்கு உட்படுத்தப்பட்டால் முதலில் அந்த கம்பியின் நீளம் மெதுவாகக் கூடும். இந்நிலையில் ஊக்கின் விதி செயல்படும். நீட்சி, விசையைப் பொறுத்து மாறுபடும். மீட்சி எல்லைக்குள் இருக்கும்போது விசையை அகற்றினால், கம்பி மறுபடியும் முதல் நிலைக்குத் திரும்பும். மீட்சி எல்லைக்கு அப்பால் விசையின் சிறு மாற்றமும் மிகவும் அதிகநீட்சியினைத் தோற்றுவிக்கும். இது தளர்நிலை எனப்படும். சிறிது நேரத்தில் அறுநிலையை (Breaking point) அடைந்து கம்பி அறுந்துவிடும்.

உசாத்துணை[தொகு]

A dictionary of science -ELBS

"https://ta.wikipedia.org/w/index.php?title=தளர்நிலை&oldid=2056635" இருந்து மீள்விக்கப்பட்டது