தல்பத் சிங் பரசுதே
தல்பத் சிங் பரசுதே | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தொகுதி | சாதோல் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | மே 30, 1950 சாதோல், மத்தியப்பிரதேசம் |
இறப்பு | 1 சூன் 2016 குருகிராமம், அரியானா | (அகவை 66)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | தானா பாய் |
பிள்ளைகள் | 2 மகன்கள் & 4 மகள்கள் |
இருப்பிடம் | சாதோல் |
As of 22 செப்டம்பர், 2006 Source: [1] |
தல்பத் சிங் பரசுதே (Dalpat Singh Paraste)(30 மே 1950 - 1 சூன் 2016) என்பவர் இந்தியாவின் 14வது மக்களவை உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் சாதோல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்தார். சாதோல் தொகுதியிலிருந்து நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
2009 தேர்தலில் இவருக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. குருகிராமில் மூளை இரத்தக்கசிவு காரணமாக மே 27 முதல் மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த பரசுதே, 1 சூன் 2016 அன்று இறந்தார்.[1][2]