தலையிடாமைக் கொள்கை
Jump to navigation
Jump to search
தலையிடாமைக் கொள்கை (Laissez-faire) என்பது நிகழ்வுகளை அவற்றின் இயல்பான போக்கிலேயே விட்டுவிடவேண்டும் என்று கூறும் கொள்கை ஆகும். இது, சமூகத்தின் பெரும்பாலான அல்லது எல்லா அம்சங்களிலும் அரசுத் தலையீடுகளைக் குறைக்கவேண்டும் அல்லது முற்றாகவே இல்லாமல் செய்யவேண்டும் என விரும்பும் பலவகையான பொருளியல் கொள்கைகளையும், அரசியல் கொள்கைகளையும் விவரிக்கப் பயன்படுகின்றது.
பொருளியலில் தலையிடாமைக் கொள்கை[தொகு]
பொருளியலில் தலையிடாமைக் கொள்கையை ஆதரிப்பவர்கள், பொருளியல் விடயங்களில் அரசின் தலையீடு மிகக் குறைவாக அல்லது முற்றாகவே இல்லாமல் இருக்கவேண்டும் என்கின்றனர். இது, கட்டற்ற சந்தை, மிகக் குறைந்த வரிகள், குறைவான விதிமுறைகள், தனியார் சொத்துரிமை என்பவற்றைக் குறிக்கின்றது.