உள்ளடக்கத்துக்குச் செல்

தலைமுறை ஒய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைமுறை ஒய் (Generation Y) என்பது பொதுவாக 1980 ஆம் ஆண்டுக்கும் 1995 ஆம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்களை குறிக்கும்[1]இத்தலைமுறையினர் புத்தாயிரம் ஆண்டை நோக்கி பிறந்தவர்கள் என்பதால் புத்தாயிரவர் (Millennials) என்றும் அழைப்பர்.

ஒரு குறிப்பிட்ட நபர்களை ஒய் தலைமுறையினர் என அழைப்பது சர்ச்சைக்குரியதாக கருதப்பட வாய்ப்புண்டு. ஏனெனில் ஒய் தலைமுறை என்னும் சொல், எக்ஸ் தலைமுறை என்ற சொல்லில் இருந்து உருவானதாகும். எக்ஸ் தலைமுறை என்ற சொல்லை ஆரம்ப காலத்தில் இழிவுப்படுத்தும் விதமாகவே உருவாக்கப்பட்டது இதற்கு காரணம் எனலாம்.

ஓய் தலைமுறையினரின் பண்புகள்

[தொகு]

இணையம் இல்லாத காலத்தையும், இணையம் கோலோச்சும் காலத்தையும் பார்த்தவர்கள் என்பதால் முந்தைய தலைமுறையினரின் கிண்டல் கேலிகளை பொருட்படுத்தாது தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் திறமைசாலிகளாக இருப்பார்கள். சமூக சிந்தனை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கொண்டிருப்பார்கள். போராட்டங்களில் ஈடுபாடு காட்டுவார்கள். பாலினச் சமத்துவத்தோடு தங்கள் குழந்தைகளை சரிசமமாக நடத்துதல் போன்றவற்றில் முன்மாதிரிகளாக இருப்பார்கள். குடும்பம்-வேலை என்ற இரட்டைக் குதிரைச் சவாரியில் திறமைசாலிகளாக இருப்பார்கள்.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைமுறை_ஒய்&oldid=4188081" இலிருந்து மீள்விக்கப்பட்டது