தலைத்தோப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைத்தோப்பு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காரான் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒரு கடற்கரையோர கிராமம் ஆகும். இந்தக் கிராமத்தில் சுமார் 110 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் மீன்பிடித்தொழில் செய்கின்றனர். பெண்கள் கூலிவேலைக்குச் செல்கின்றனர். இந்த ஊரில் ஒரு சிறிய தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. உயர்கல்விக்காக ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனியார் பள்ளியை நாடிச் செல்கின்றனர். கல்லூரிக்குச் செல்லும் முதல் தலைமுறை மாணவர்களைக் கொண்ட இந்த கிராமத்தில் உயர்கல்வி என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைத்தோப்பு&oldid=1255688" இருந்து மீள்விக்கப்பட்டது