தலைக்கு மேல் பிம்பம் வீழ்த்தி
Appearance
தலைக்கு மேல் பிம்பம் வீழ்த்தி (Overhead projector) என்பது பார்வையாளர்கள் அல்லது கற்போருக்கு படங்களைப் பெரிதாக்கி காட்சிப்படுத்துவதற்கு வசதியான ஒரு கருவியாகும். இது நழுவ வீழ்த்தியின் மாறுபட்ட வடிவம் ஆகும்.[1][2][3]
பயன்படுத்தும் முறை
[தொகு]ஒளி ஊடுருவக் கூடிய அசிடேட் பிளாஸ்டிக் அட்டையில் எழுதுவதற்கு என அமைந்த எழுதுகோலால் அழிக்க முடியாத மைப்பேனாவைக் கொண்டோ அல்லது நீா்ம எழுத்துப் பேனாவைக் கொண்டோ பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதோ எழுதி திரையில் வீழ்த்தலாம்.
கருவியின் பயன்கள்
[தொகு]- பயன்படுத்துபவர் பார்வையாளர்களை பாா்த்துக் கொண்டே எழுதவும், விளக்கிக் காட்டவும் முடியும்.
- இக்கருவியைப் பயன்படுத்தும் போது அறையை இருட்டாக்கத் தேவை இல்லை.
- படத்தைக் கருவியின் மேடை மீது வைத்து முக்கிய பகுதிகளை கைவிரலைக் கொண்டோ அல்லது பென்சிலின் முனையைக் கொண்டோ குறிப்பிட்டுத் திரையில் காணுமாறு செய்யலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Power, Stephen. "'The pedagogic perfection of the overhead projector – and why interactive whiteboards alone won't ever match it'". Retrieved 9 January 2018.
- ↑ Kavita, GU; Shashikala, P; Sreevidyalata, GM (2015). "Use of Over Head Projector for teaching and learning Fine Needle Aspiration Cytology skills to undergraduate students and their perception". Journal of Educational Research & Medical Teacher 3 (1): 31–33. http://jermt.org/wp-content/uploads/2015/11/10.pdf.
- ↑ "Overhead projector Definition & Meaning". www.britannica.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-09-17.