தர்சன் தர்மராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்சன் தர்மராஜ்
Darshan Dharmaraj
பிறப்புலிங்கநாதன் தர்மராஜ்
மார்ச்சு 2, 1981(1981-03-02)
இறக்குவானை, இலங்கை
இறப்பு2 அக்டோபர் 2022(2022-10-02) (அகவை 41)
கொழும்பு, இலங்கை
கல்விசென் ஜோன் தமிழ் வித்தியாலயம், இறக்குவானை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008–2022
வாழ்க்கைத்
துணை
சுபாசிணி
பிள்ளைகள்1
விருதுகள்சிறந்த திரைப்பட நடிகர் 2012

தர்சன் தர்மராஜ் (Darshan Dharmaraj, சிங்களம்: දර්ශන් ධර්මරාජ්; 2 மார்ச் 1981 – 2 அக்டோபர் 2022) இலங்கைத் திரைப்பட, நாடக, தொலைக்காட்சி நடிகரும், ஓவியரும்[1] ஆவார்.[2] இவர் சிட்னி சந்திரசேகராவின் ஏ9 என்ற சிங்களத் தொலைக்காட்சி நாடகம் மூலம் முதன் முதலில் அறிமுகமானார்.[3] 2012 ஆம் ஆண்டில் அசோக அந்தங்கமவின் இனி அவன் திரைப்படத்தில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளியாக நடித்தமைக்காக இவருக்கு பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

லிங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட தர்சன்[1] இரத்தினபுரி மாவட்டம், இறக்குவானை என்ற ஊரில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் பிறந்தார். அங்குள்ள சென் யோன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்றார்.[4] தந்தை தர்மராஜ் ஒரு சிறந்த ஓவியக் கலைஞர். தந்தையிடம் ஓவியம் கற்றுக் கொண்டார்.[1] பள்ளிக்க்கூடத்தில் நாடகங்களில் நடித்துப் பாராட்டுப் பெற்றார். தந்தை இறந்தபிறகு, இவர் மீது குடும்பப் பொறுப்புகள் சுமத்தப்பட்டன. இதனால் வேலை தேடி கொழும்பு வந்தார். தொடக்கத்தில் மூட்டை சுமக்கும் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றினார்.[1]

நடிப்புப் பணி[தொகு]

பிரபல சிங்கள இயக்குநர் சிட்னி சந்திரசேகராவின் தொலைக்காட்சி நாடகமொன்றில் நடிக்க புதுமுகங்கள் தேவை என்ற விளம்பரம் அவரது கண்களில் பட்டது. அதற்கு விண்ணப்பித்து நேர்முகத் தேர்வின் மூலம் நடிப்பதற்குத் தெரிவானார்.[1] 2008 ஆம் ஆண்டில் இந்நாடகம் ஒளிபரப்பானது. சிங்கள மொழியில் அப்போது சரளமாகப் பேசாவிட்டாலும், மூன்று மாதங்களுக்குள் அந்த மொழியைக் கற்றுக்கொண்டார்.[5] தொடர்ந்து பிரசன்ன விதானகே, அசோகா அந்தகம, பூதி கீர்த்திசேன ஆகிய புகழ்பெற்ற இயக்குநர்களின் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.[1] 2008 ஆம் ஆண்டில் பிரபாகரன் என்ற சிங்களத் திரைப்படம் ஒன்றின் மூலம் சிங்களத் திரையுலகிற்கு அறிமுகமானார்.[6]

இத்தாலியின் சிறந்த தயாரிப்பாளரும், இயக்குநருமான உபெர்ட்டோ பசோலினியின் மச்சான் (2008) என்ற சிங்கள/ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் 2008 முதல் 2010 வரை பன்னாட்டுத் திரைப்பட விழாக்கள் அனைத்திலும் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்றது.[1]

இறப்பு[தொகு]

தர்சன் தர்மராஜ் 2022 அக்டோபர் 2 இல் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மாரடைப்பினால் தனது 41-ஆவது அகவையில் காலமானார்.[7]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2008 பிரபாகரன் விடுதலைப் புலிகளின் தலைவர் சிங்களம்
2008 மச்சான் சுரேஷ் சிங்களம், ஆங்கிலம்
2009 இரா ஹண்ட யட்ட விடுதலைப் புலிப் போராளி சிங்களம்
2012 இனி அவன் அவன் தமிழ்
 • சிறந்த நடிகர் - தெரண லக்சு திரைப்பட விருது (2013)[8]
 • சிறந்த நடிகர் - ஹிரு கோல்டன் திரைப்பட விருது (2014)[9]
2012 மாதா யோகா சிங்களம்
2015 அட்ரசு நா (முகவரி இல்லை) குப்பயாமெ கோரிங் சிங்களம்
2015 இசுபந்தான தர்சன் சிங்களம்
2016 உலத் எக்கய் பிலத் எக்கய் கரப்பிட்டிய தர்சன் சிங்களம்
2017 அலோக்கோ உடப்படி தட்டிய சிங்களம்
2018 கோமாளி கிங்ஸ் மோகன் தமிழ்
2018 பொரிசதய களு மாத்தையா சிங்களம்
2018 தவென விகாகன் விலங்கு வதையாளர் சிங்களம்
2020 சுனாமி செல்வம் சிங்களம் [10]
2020 சுபர்ணா ஆயோ 433 சிங்களம்
2021 கவுருத் தன்னெ நா சிங்களம் [11]
TBD ஆகார்ச ரகு சிங்களம் [12]
TBD பண்டுர சிங்களம் [13]
TBD ரிக்கி டீனின் சாகசங்கள் ஓட்டுனர் சிங்களம்
TBD மொனாரா விலக் சிங்களம் [14]
TBD ஜீவா சிங்களம் [15]
TBD பாஸ்போர்ட் சிங்களம் [16]
2019 நமது தந்தைகளின் வீடு பலமொழி [17]
TBD மரியா சிங்களம் [18]
TBD வழக்கு இல 447 அறிவிப்பில் சிங்களம் [19]
2022 வித்துக்கள் தமிழ்/சிங்களம்/ஆங்கிலம் [20]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 எம்.ரிஷான் ஷெரீப் (2 அக்டோபர் 2022). "தர்ஷன் தர்மராஜ்- அஞ்சலி". jeyamohan.in.
 2. "Darshan Dharmaraj". National Film Corporation Of Sri Lanka. 26 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
 3. Kodagoda, Anuradha (6 January 2013). "Ini Avan heralds a new era for Lankan Tamil cinema". Sunday Observer. 26 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
 4. "I am not bad". Sarasaviya. 1 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Talk with Darshan". Sarasaviya. 13 மே 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Actor Darshan Dharmaraj". Sinhala Cinema Database. 17 February 2018 அன்று பார்க்கப்பட்டது.
 7. Nilar, Amani (2 October 2022). "Veteran actor Dharshan Dharmaraj passes away" (in en). News First. https://www.newsfirst.lk/2022/10/02/veteran-actor-dharshan-dharmaraj-passes-away/. 
 8. "'Ini Avan' creates history". The Sunday Times. 6 October 2013. 26 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Hiru golden film awards which took srilankan cinema to global stage concludes successfully massive response from public". Hiru News. 26 October 2014. 19 August 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 February 2017 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Dr. Somaratne Dissanayake new film". Sarasaviya. 1 November 2018 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Kawuruwath Danne Nehe". Daily Mirror. 18 August 2019 அன்று பார்க்கப்பட்டது.
 12. "අතීතය වසාගත් සොඳුරු කතාවක්". Sarasaviya. 18 அக்டோபர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 13. "අප අතර සිටිමින් අප බිලි ගන්නා බාඳුරා". Sarasaviya. 11 ஆகஸ்ட் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 August 2018 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Malini with Sanath after 14 years". Sarasaviya. 22 August 2019 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Jeewan turns director". Sunday Observer. 11 September 2019 அன்று பார்க்கப்பட்டது.
 16. "Passport’ flies to India and Europe". Daily News (Sri Lanka). 22 October 2019. http://www.dailynews.lk/2019/10/22/entertainment/200480/%E2%80%98passport%E2%80%99-flies-india-and-europe?page=1. 
 17. Mayorga, Emilio (5 August 2018). "Locarno: Suba Sivakumaran's 'House of My Fathers' Sells to Hong Kong's Asian Shadows (EXCLUSIVE)". Variety. 29 August 2020 அன்று பார்க்கப்பட்டது.
 18. "A film without an actress by Aruna Jayawardena". Sarasaviya. 5 March 2021 அன்று பார்க்கப்பட்டது.
 19. "Case number 447 opens". Sarasaviya. 18 March 2021 அன்று பார்க்கப்பட்டது.
 20. "Praana comes in early August". සරසවිය. 2 July 2022 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்சன்_தர்மராஜ்&oldid=3592696" இருந்து மீள்விக்கப்பட்டது