தமிழ் விசை (அன்ரொயிட்)
Appearance
தமிழ் விசை எனப்படுவது ஆண்ட்ராய்டு மூலம் உயிரூட்டப்பட்ட தொலைபேசிகளில் தமிழில் எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு நகர்பேசிச் செயலியாகும். ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் இயல்பிருப்பான ஆதரவு தமிழ் மொழிக்கு இல்லாவிட்டாலும் இந்தச் செயலி மூலம் தமிழில் எழுதிக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றமை ஒரு சிறப்பியல்பாகும்.
செயலியின் பின்ணனி
[தொகு]தமழில் உள்ளிடுவதற்கு வேகமாகப் பிரபலமாகி வரும் அந்திரொயிட் இயங்குதளத்திற்கு ஒரு செயலி தேவை என்ற நோக்கை புரிந்து தமிழா குழுமத்துடன் இணைந்து ஜெகதீசன்[1] என்ற தன்னார்வலர் இந்தச் செயலியை உருவாக்கி இலவசமாக அந்திரொயிட் சந்தையில் வெளியிட்டார்[2]. இதே வேளை இந்த செயலி திறந்த மூலமாகவும் கிடைக்கின்றது[3].