தமிழ் விசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் விசை (TamilKey) கணினியில் தமிழில் எழுத உதவும் ஒரு ஃபயர் ஃபாக்ஸ் நீட்சியாகும். இதனைத் 'தமிழா' அமைப்பைச் சேர்ந்த முகுந்தராஜின் முதலில் முயன்று வெளியிட்டார். பிறகு, Voice on Wings மேம்படுத்தித் தந்தார். தற்போது, கட்டற்ற தமிழ்க் கணிமைவைச் சேர்ந்த தகடூர் கோபியால் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்நீட்சி, அஞ்சல், தமிழ்நெட்99, பாமினி, புதிய, பழைய தமிழ்த் தட்டச்சு விசைப்பலகை தளக்கோலங்களை ஆதரிக்கிறது. இதனை பயன்படுத்த ஏதேனும் ஒரு ஒருங்குறி எழுத்துருவைக் கணினியில் நிறுவி இருக்க வேண்டும். இதனை ஃபயர்பாக்ஸ் தளத்தில் பதிவிறக்கலாம்[தொடர்பிழந்த இணைப்பு]. தண்டர்பேர்ட் என்னும் மின்னஞ்சல் செயலிக்கான நீட்சியையும் இத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_விசை&oldid=3215330" இருந்து மீள்விக்கப்பட்டது